நடிகர் கமல்ஹாசன் கதை திரைக்கதை எழுதி நடித்த தேவர் மகன் படத்தில் தனது தந்தையான சிவாஜி கணேசன் முன்பு நின்று பேசக்கூட தயங்கும் ஒரு மகனாக கமல்ஹாசன் நடித்திருப்பார். அதில் தந்தை சிவாஜியும் மகன் கமலும் சந்தித்து கொள்ளும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கவிதையாக தனித்துவமாக ரசனையாக இன்றும் பார்த்தால் ரசிக்கும்படியாக இருக்கும்.
நிஜ வாழ்க்கையிலும் அன்றைய காலகட்டத்தின் தந்தை மகன் உறவு என்பது அப்படி மரியாதை பெற்றதாக இருந்தது. அதே போல் அண்ணன் தம்பி மரியாதை என்பதை நாட்டாமை படம் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அப்படி சினிமாவில் காட்டப்பட்ட மரியாதை, சினிமா துறையிலும் இருந்தது. மூத்த நடிகர்களை மூத்த நடிகைகளை இளம் நடிகர் நடிகைகள் மரியாதையாக பார்த்தனர். அவர்கள் முன்பு பணிவாக நடந்து கொண்டனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு சீனியர் நடிகராக இருந்தாலும் மூத்த நடிகையாக இருந்தாலும் வளர்ந்து வரும் இளம் நடிகர் நடிகைகளுக்கு அவர்களை பற்றிய பெரிய அபிமானம் இருப்பதில்லை. அவர்களது அனுபவத்துக்கும் திறமைக்கும் மரியாதை தருவதில்லை என்று தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை ரோஜா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, சீனியர் ஆர்ட்டிஸ்ட்களை எல்லாம் இப்போது யார் மதிக்கிறார்கள் சொல்லுங்க பார்ப்போம். யார் மதிக்கிறாங்க? அவங்கவங்க கால் மேலே கால் போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்க. எல்லாம் கல்ச்சர் மாறிப்போச்சு.
அவங்க என்ன நினைக்கறாங்க? மாடர்ன் கல்ச்சர்ன்னு சொல்றாங்க. மாடர்ன் கல்ச்சர் என்று சொன்னாலும் நாங்க எல்லாம் சீனியர் ஆர்ட்டிஸ்ட் வந்தா எந்திரிச்சு நிப்போம் இல்லையா? அதுவந்து ஒரு ரெஸ்பெக்ட். அவங்க சீனியாரிட்டுக்கு கொடுக்கிற ரெஸ்பெக்ட். அது கம்மி ஆகிடுச்சு.
நீங்க பார்த்தீங்க என்றால் ஹாய் சொல்றது பாய் சொல்றது ஹக் பண்றது தவிர பெரிய ஆளுங்களை பார்த்தால் அந்த வணக்கம் போடறதே இல்லை இப்போது என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். நாகரிக மாற்றத்தில் சினிமாவில் பெரிய நடிகர்களை மதிக்கும் பழக்கமும் பண்பாடும் இல்லாமல் போய்விட்டது என்று அவர் ஒரு சீனியர் நடிகையாக கூறியிருப்பது இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.





