- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்த் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை இவரா? அதுவும் இத்தனை படங்களா? -...

நடிகர் ரஜினிகாந்த் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை இவரா? அதுவும் இத்தனை படங்களா? – டாப் 5ல் உள்ள மற்ற நடிகைகள் யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அவரது படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் நடித்து விட மாட்டோமா என்று பல நடிகர்கள் நடிகைகள் ஏங்குகின்றனர். கடந்த 1977ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக வெளிவந்த அவரது கூலி படம் வரை மொத்தம் 171 படங்களில் இதுவரை நடித்து இருக்கிறார்.

இப்போது அவரது நடிப்பில் ஜெயிலர் 2 படம் 172வது படமாக அடுத்து வெளிவர இருக்கிறது. அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் படம் 173வது படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அதிக படங்களில் நடித்த நடிகைகள் அதாவது கதாநாயகிகள் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்துடன் அதிக படங்களில் நடித்த 5 நடிகைகள் குறித்து இப்போது தெரிந்துக்கொள்ளலாம். அதில் முதலிடத்தில் இருப்பவர் யார் 5ம் இடத்தில் இருப்பவர் யார் என்பதையும் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழ், இந்தி படங்களில் அதிக படங்களில் நடித்தவர் நடிகை மாதவி. இவர் மொத்தம் 9 படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

அடுத்ததாக நடிகை அம்பிகா கடந்த 1980களில் ரஜினியுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் ரஜினியுடன் இணைந்து நடித்த படங்களின் எண்ணிக்கை 8 ஆகும். அடுத்து 4வது இடத்தில் நடிகை ஸ்ரீவித்யா நடிகர் ரஜினிகாந்த் உடன் காதலியாக மாமியாராக அம்மாவாக அக்காவாக மொத்தம் 11 படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக 3வது இடத்தில் நடிகை ராதிகா உள்ளார். கடந்த 1980களில் வெளியான ரஜினிகாந்த் நடித்த 11 படங்களில் அவருடன் இணைந்து ஜோடியாக ராதிகா நடித்திருக்கிறார்.

- Advertisement -

அடுத்து நடிகர் ரஜினிகாந்த் உடன் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் அதிக படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி தான். அவர் மொத்தம் 21 படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர்களை எல்லாம் விட நடிகர் ரஜினியுடன் அதிக படங்களில் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் நடிகை ஸ்ரீபிரியா தான். அவர் கடந்த 1970 மற்றும் 80களில் வெளியான ரஜினிகாந்த் நடித்த படங்களில் மொத்தம் 28 படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது எல்லாம் ஒரு நடிகை ஒரு நடிகருடன் 2 அல்லது 3 படங்களில் ஜோடியாக நடித்தாலே ரசிகர்களுக்கு போரடித்து விடுகிறது. ஆனால் கடந்த 1980களில் ஒரே ஹீரோ ஒரே ஹீரோயின் என பல படங்களில் ஜோடியாக நடித்து அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அந்த படங்கள் வெள்ளி விழா படங்களாக வெற்றியும் கண்டுள்ளது. அந்த வகையில் ரஜினியுடன் 28 படங்களில் ஸ்ரீபிரியா நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்