- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தப்பாக ஷாட் எடுத்தால் நடிகர் விஜயகாந்த் என்ன செய்வார் தெரியுமா?...

ஒரு இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தப்பாக ஷாட் எடுத்தால் நடிகர் விஜயகாந்த் என்ன செய்வார் தெரியுமா? – இயக்குனர் விக்ரமன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். புது வசந்தம் படம் மூலம் சினிமாவுக்குள் இயக்குனராக காலடி வைத்த விக்ரமன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். பூவே உனக்காக சூரியவம்சம் வானத்தை போல உன்னை நினைத்து என அவரது படங்கள் காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கின்றன.

நடிகர் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் வானத்தைப் போல. இதில் பிரபுதேவா லிவிங்ஸ்டன் மீனா ரமேஷ்கண்ணா பாலு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் விஜயகாந்த் நடித்த பல வெற்றிப் படங்களில் மிக முக்கியமான படமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குனர் விக்ரமன், விஜயகாந்த் குறித்து சில விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, நடிகர் விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் எந்த இயக்குனர் போய் அவரிடம் கதை சொன்னாலும் கதையை கேட்டுவிட்டு, அந்த கதை பிடிக்கவில்லை என்று அவர்களை திருப்பி அனுப்பியதே இல்லை. இதை யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.

அவருக்கு கதை பிடிக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் அவர் நடிப்பார். நம்மை நம்பி ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறார். நம்மை நம்பி ஒரு இயக்குனர் ஒரு கதையை இயக்குகிறார். அப்போது அவர்களுக்கு இருக்கிற ஒரு தன்னம்பிக்கை, தைரியம் ஏன் நமக்கு இருக்க கூடாது என்ற எண்ணத்தில்தான் அவர் அந்த மாதிரி கதை பிடிக்காத படங்களிலும் ஆர்வத்துடன் நடித்தார்.

- Advertisement -

கதை பிடிக்காத படங்களிலும் கூட முழுமையான ஒத்துழைப்பு தந்து மிக சிறப்பாக நடிப்பார். எந்த இடத்திலும் படத்தில் இடையூறு செய்ய மாட்டார். ஒரு இயக்குனர் தப்பாக ஷாட் எடுத்தாலும் கூட அது அவருக்கு தெரியும். ஆனால் வெளியில் காட்டிக்க மாட்டார். பக்கத்தில் இருக்கும் யாரிடமும் அதை பற்றி சொல்ல மாட்டார். கமெண்ட் அடிக்க மாட்டார்.

நான் இயக்கிய வானத்தை போல படத்தின் ஷூட்டிங் அப்பவே மானிட்டர் வந்துவிட்டது. ஆனால் நான் மானிட்டர் வைக்கலே. ஆனால் மரியாதை படத்தில் மானிட்டர் வைத்தேன். மானிட்டர் பார்த்து ஷூட்டிங் செய்தேன். அப்போது ஒரு நாள் கூட விஜயகாந்த் வந்து மானிட்டர் பார்த்தது கிடையாது. அவர் நடிப்பார். நடித்து முடிச்சிட்டு வெளியே போய் உட்கார்ந்து கொள்வார் அவ்வளவுதான். அந்த மாதிரியான ஒரு நடிகரை எல்லாம் பார்க்க முடியாது என்று இயக்குனர் விக்ரமன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்