- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நோயாளியாக காரணமே அந்த நடிகையின் கணவர்தான் - பிரபல இயக்குனர் விக்ரமன் தந்த ஓபன்...

நான் நோயாளியாக காரணமே அந்த நடிகையின் கணவர்தான் – பிரபல இயக்குனர் விக்ரமன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். கடந்த 1990, 2000ம் களில் விக்ரமன் இயக்கிய புது வசந்தம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் வானத்தைப்போல உன்னை நினைத்து பூவே உனக்காக சூரிய வம்சம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக இருந்தன. இப்போதும் விக்ரமனின் படங்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பி ரசித்து பார்க்கப்படுகின்றன.

சமீப காலமாக விக்ரமன் படங்கள் எதுவும் இயக்கியதாக தெரியவில்லை. எனினும் தனது சினிமா அனுபவங்கள் குறித்து அவ்வப்போது நேர்காணல்களில் அவர் பேசி வருகிறார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். இவர் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக, சூரிய வம்சம் படங்களில் சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் நீ வருவாய் என என்ற படம் மூலம் ராஜகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

- Advertisement -

தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் காதலுடன் போன்ற படங்களை ராஜகுமாரன் டைரக்ட் செய்தார். இந்த 4 படங்களிலுமே நடிகை தேவயானி தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விண்ணுக்கும் மண்ணுக்கும் படப்பிடிப்பின் போது இயக்குனர் ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, ராஜகுமாரன் என்னுடைய படங்களில் உதவி இயக்குனராக என்னுடன் பணி புரிந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் ராஜகுமாரன் வீட்டிலிருந்து சிக்கன் எல்லாம் சாப்பிட கொடுத்து விடுவார்கள். அவர்களது வீட்டு தோசை மிகவும் அருமையாக இருக்கும். அதை தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு தான் எனக்கு சர்க்கரை நோய் வந்ததுதான் மிச்சம்.

- Advertisement -

ஒருமுறை எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்த வேளையில் என் மகன் ராஜகுமாரனை அங்கிள் அங்கிள் என்றுதான் அழைப்பான். அப்போது ராஜகுமாரன் எனக்கு நிறைய உதவிகள் செய்து ஆதரவு தந்தார் என்று இயக்குனர் விக்ரமன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக இயக்குனர் ராஜகுமாரன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இணையத்தில் வைரலாகி வருகிறார். ஏனெனில் நடிகர்கள் விக்ரம் கமல்ஹாசன் போன்றவர்களின் நடிப்பு குறித்தும் இயக்குனர் மகேந்திரன் குறித்தும் அவர் விமர்சித்திருந்த நிலையில் அவரது குருநாதர் இயக்குனர் விக்ரமன் அவரை பாராட்டி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்