- Advertisement -
Homeபொழுதுபோக்குலேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா... அப்போ நயன்தாரா சொல்வது அத்தனையும் பொய்யா......

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா… அப்போ நயன்தாரா சொல்வது அத்தனையும் பொய்யா… என்ன மேடம் இதெல்லாம்…

- Advertisement -

சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. அங்கிருந்து தொடர்ச்சியாக வெற்றிப் பாதையில் பயணித்த அவர், மூத்த நடிகர்கள் ரஜினி விஜய் அஜித் உடன் ஜோடியாக படங்களில் நடித்தார். இதன்பிறகு நயன்தாராவின் கிராஃப் பெரிய அளவில் உயர்ந்தது.

 

- Advertisement -

அவரை படத்தின் கதாநாயகியாக தக்கவைக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர். இதன் நடுவே, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார் நயன்தாரா. மூத்த நடிகர்கள் மட்டுமல்லாமல் இளம் நடிகர்களுடனும் ஜோடி சேரும் அவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

 

- Advertisement -

இதில் அவர் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து அறம், மாயா என வரிசையாக வெற்றி திரைப்படங்களை அவர் கொடுத்தார். அதன் பிறகு நயன்தாரா சோலோவாக நடித்த எந்த திரைப்படமும் சரியாக போகவில்லை.

 

அடுத்தடுத்து நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அத்தனையும் படு தோல்வியை சந்திக்க ஆனால் அவர் மட்டும் சோலோ கதாபாத்திரங்களை விடுவதாக இல்லாமல் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த ஆண்டு அவரது 75 ஆவது திரைப்படமாக அன்னபூரணி வெளியானது. அதுவும் வழக்கம் போல் தோல்வியடைய, பிராமண சமூகத்தை இழிவாக பேசியதாக சர்ச்சையிலும் சிக்கியது.

 

இதற்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார் நயன்தாரா. தற்போது அவர், டெஸ்ட் மண்ணாங்கட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம் என்று பலமுறை கூறிவிட்டதாகவும், ஆனால் தயாரிப்பாளர்கள் தான் விடாப்பிடியாக அதனை பயன்படுத்துவதாகவும் கூறினார்.

 

ஆனால் சினிமா விமர்சகர்களோ உண்மை அது இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். நயன்தாரா, தான் ஒப்பந்தமாகும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்களை நிர்பந்திப்பதாக தெரிவிக்கின்றனர். உண்மை இப்படி இருக்க எதற்கு அவர் வெளியில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று பேசுகிறார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்