- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ, ஹீரோயின் வாங்கின சம்பளத்துக்கு மேல் கூவிய படத்துக்கு இப்படி ஒரு பெருமையா? அட்ரா சக்க…....

ஹீரோ, ஹீரோயின் வாங்கின சம்பளத்துக்கு மேல் கூவிய படத்துக்கு இப்படி ஒரு பெருமையா? அட்ரா சக்க…. ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

என் புருஷன் குழந்தை மாதிரி என்ற படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனும், நடிகர் வடிவேலுவும் பங்கேற்ற ஒரு காட்சியில், வாங்குன காசுக்கு மேல கூவறாண்டா என்று நடிகர் வடிவேலு ஒரு நபரை பார்த்து கலாய்த்து டயலாக் பேசுவார். அதே போல் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தில் நடித்த நாயகன் விஜய் சேதுபதி நாயகி நித்யா மேனன் இருவரும் வாங்கின சம்பளத்துக்கு மேல் நடித்து விட்டனர், அல்ல அல்ல கத்தி விட்டனர் என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் குடும்ப சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த கதையில் ஆரம்பம் முதல் இறுதிவரை விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் சண்டை போடுவதும் காட்டு கூச்சலாய் கத்துவதுமே படத்தில் பிரதானமாக இருந்தது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் டைரக்ட் செய்திருந்தார்.

- Advertisement -

கடந்த மாதம் 25ம் தேதி தலைவன் தலைவி படம் தமிழில் வெளியானது. இந்த படம் தெலுங்கு டப்பிங் பதிப்பில் சார் மேடம் என்ற டைட்டிலில் 2 தினங்களுக்கு முன் தெலுங்கில் வெளியானது. தலைவன் தலைவி படம் 2வது வாரத்திலும் உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதாக அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த 2025ம் ஆண்டில் இதுவரைவெளிவந்த 153 தமிழ் படங்களில் 10 படங்கள் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன. அந்த வரிசையில் 10வது படமாக தலைவன் தலைவி படமும் 50 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. குட் பேட் அக்லி டிராகன் விடாமுயற்சி ரெட்ரோ குபேரா தக்லைஃப் ஃடூரிஸ்ட் பேமிலி வீரதீரசூரன் மதகத ராஜா ஆகிய 9 படங்கள் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்த படங்களாக இருந்தன.

- Advertisement -

அந்த வரிசையில் இப்போது 10வது படமாக தலைவன் தலைவி படமும் 50 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் குட் பேட் அக்லி படம் 250 கோடி ரூபாய் வசூலில் முதலிடம், டிராகன் படம் 150 கோடி ரூபாய் வசூலித்தில் 2ம் இடத்திலும் உள்ளன.

விடாமுயற்சி ரெட்ரோ படங்கள் 100 கோடி ரூபாய், தமிழ் தெலுங்கில் வெளியான குபேரா 100 கோடி ரூபாய், தக்லைஃப் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் ரூ. 100 கோடிக்கு மிக அருகில் வசூலித்த நிலையில், 50 கோடி ரூபாயை வீர தீர சூரன் மதகத ராஜா ஆகிய படங்கள் கடந்துள்ளன. அந்த வரிசையில் இப்போது தலைவன் தலைவி படமும் 50 கோடி ரூபாய் வசூலை கடந்த படமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்