- Advertisement -
Homeபொழுதுபோக்குயானையா இருந்தாலும், டைனோசரா இருந்தாலும்… இயக்குனர்கள் வெற்றிமாறன் - பேரரசு திடீர் மோதலால் விழா...

யானையா இருந்தாலும், டைனோசரா இருந்தாலும்… இயக்குனர்கள் வெற்றிமாறன் – பேரரசு திடீர் மோதலால் விழா மேடையில் திடீர் பரபரப்பு

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக இருக்கிறார். பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த வெற்றிமாறன் ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற படங்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனராக இருக்கிறார்.

இப்போது வாடிவாசல் என்ற படத்தை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்கு முன் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பை முடிக்க அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதில் கதாநாயகன் சூரி நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி, மஞ்சுவாரியார் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

முன்பெல்லாம் மணிரத்னம், கே பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா படங்களில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர், நடிகைகள் கூறி வந்தனர். ஆனால் இப்போது வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும். பாலா, ஷங்கர் இயக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர். அந்தளவுக்கு வெற்றிமாறனுக்கு நாளுக்கு நாள் கவனம் அதிகமாகி வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறனை பொருத்த வரை நடிகருக்காக படம் இயக்கும் இயக்குனர் கிடையாது. அவரது கதைக்கான நடிகரை தான் தேர்வு செய்வார். அவர் சொன்னபடி நடிப்பதுதான் ஹீரோவின் பணியாக இருக்கும். மற்றபடி ஹீரோவுக்காக எந்த அட்ஜட்ஸ்மென்டும் செய்கிற இயக்குனர் லிஸ்ட்டில் வெற்றிமாறன் இல்லை என்பதே அவரது முதல் வெற்றியாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த கள்வன் என்ற படத்தின் டிரெய்லர் வெளியீடு பிரமோ நிகழ்ச்சியும் பிரஸ்மீட்டும் நடந்தது. இதில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு, மேடையில் பேசினார். அப்போது அவர் யானை என்றாலே ராசியானதுதான். யானை என்றாலே பிள்ளையார்தான். மற்ற யானை படங்களை போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.

அதன்பிறகு மேடையில் பேச வந்த இயக்குனர் வெற்றிமாறன், யானையை வெச்சு எடுத்தாலும், டைனோசரை வெச்சு எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நன்றாக இருந்தால்தான் படம் ஓடும் என்று பேசினார். இயக்குனர் பேரரசு இப்போது நடிகர் சங்க பொறுப்பில், நிர்வாகியாக இருக்கிறார். கடவுள் நம்பிக்கையை மையப்படுத்தி பேசிய அவருக்கு பதிலடி தரும் விதமாக வெற்றிமாறன் பேசியது, விழா மேடையில் சலசல்ப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

சற்று முன்