நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இந்த படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் தான் என்ற தகவல் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரடக்சன்ஸ் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லாமல், இது முழுக்க முழுக்க ரீமேக் படமா, அல்லது சில காட்சிகள் மட்டும் ரீமேக் செய்யப்பட்ட படமா? ஒரு காட்சி மட்டும் ரீமேக் ஆக எடுக்கப்பட்டதா என்ற எந்த குழப்பமும் கவலையும் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு வேண்டாம்.
இது தளபதி படம். இந்த படம் ஒரு ஷோ வந்து பாருங்கள். அதற்கு பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள் என்று பதில் கூறியிருந்தார். கடைசி வரை ஜனநாயகன் ரீமேக் படமா, இல்லையா என்ற சந்தேகத்துக்கு பதில் தராமல் ஒரு வித்யாசமான பதிலை சொல்லியிருந்தார். இது விஜய் ரசிகர்களை குழப்பமடைய செய்தது.
இந்த சூழலில் பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடியிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் இதுகுறித்து தெலுங்கு செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு இயக்குனர் அனில் ரவிபுடி கூறியதாவது, விஜய் சார் ஒரு உண்மையான ஜென்டில்மேன்.
அவருக்கு சினிமாவில் இருந்து விடை கொடுக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த படம், வெளியான பிறகுதான் இந்த படத்தில் நானும் ஒரு பாகமாக இருக்கிறேனா இல்லையா என்பது தெரிய வரும். அதுவரை இதை தளபதி விஜய் படமாகவே நாம் கருதுவோம் என்று இயக்குனர் அனில் ரவிபுடியும் ஒரு குழப்பமான பதிலை கூறியிருக்கிறார்.
பகவந்த்த் கேசரியின் ரீமேக்தான் ஜனநாயகம் படமா என்பதற்கான பதிலை நேரடியாக சொல்லாமல் 2 இயக்குனர்களே இப்படி ஒரு பதிலை சொல்கிறார்களே என்று தளபதி ரசிகர்கள் வாய்விட்டு புலம்பி வருகின்றனர். இதன் மூலமாகவே அவர்கள் சொல்லும் பதிலில் இருந்து முற்றிலும் அவர்கள் மறுக்கவில்லை. அதனால் பகவந்த் கேசரி படம்தான் ஜனநாயகன் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் விளக்கம் தந்துள்ளனர்.





