- Advertisement -
Homeபொழுதுபோக்குவாய்ப்புகளை நழுவ விடும் நடிகர் அஜீத்குமார் - ஏகே 64 படம் வருமா, வராதா? சம்பளத்தை...

வாய்ப்புகளை நழுவ விடும் நடிகர் அஜீத்குமார் – ஏகே 64 படம் வருமா, வராதா? சம்பளத்தை குறைத்தும் தயாரிப்பாளர்கள் கண்டுக்கலையே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. அந்த படம் திரைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் அஜீத்குமாரின் அடுத்த படம் குறித்த எந்த தகவலும் இல்லை. ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்று தகவல் வெளியான நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்த அவர் இப்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ஒரு படத்தை இயக்க தயாராகி விட்டார்.

சினிமாவில் நடிப்பதை காட்டிலும் கார் ரேஸில் மட்டுமே அஜீத்குமாரின் முழு கவனமும் ஆர்வமும் இருந்து வருகிறது. அடுத்த 2027ம் ஆண்டுக்கான கார் ரேஸ் பயணத்திட்டத்தையும் அவர் வகுத்து விட்டார். இந்த சூழலில் அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 185 கோடி சம்பளம் கேட்பது பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. மேலும் அதை துபாய் வங்கி கணக்கில் செலுத்துமாறும் கூறி வருகிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் முதல்வராகி விட்ட நிலையில் சினிமா களத்தில் அஜீத்குமாருக்கு போட்டியும் இல்லை. மார்க்கடெ்டும் இல்லை. அவரது படங்களுக்கு அதிகபட்ச வியாபாரம் ரூ. 225 கோடியாக மட்டுமே உள்ளது. இதில் அவரது சம்பளம் மட்டுமே 185 கோடி ரூபாய் என்றால் தயாரிப்பாளர் பலத்த நஷ்டத்தை தான் சந்திக்க வேண்டும்.

இந்த சூழலில் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திடம் அஜீத்குமார் தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. அதில் அஜீத்குமார் சம்பளம் ரூ. 185 கோடியில் இருந்து 160 கோடியாக குறைந்து பிறகு ரூ. 150 கோடி என்று பைனல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த நிறுவனம் ரூ. 90 கோடி மட்டுமே சம்பளம் தர முடியும் என்று உறுதியாக கூறிய நிலையில் அந்த முயற்சி முறிந்து போய் விட்டது.

- Advertisement -

அதன்பிறகு ஒரு தயாரிப்பாளர் அஜீத்குமார் தரப்பை அணுகி ரூ. 110 கோடி வரை சம்பளம் தர சம்மதம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் பட்ஜெட் மட்டும் 120 கோடி ரூபாய் சிறுத்தை சிவா படம் பட்ஜெட் ரூ. 85 கோடி ரூபாய் என பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறி அத்துடன் அஜீத்குமார் சம்பளம் ரூ. 150 கோடி என்று முடிவாக கூறிவிட அவரும் நோ சொல்லி கிளம்பி விட்டார்.

இப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் அதிக சம்பளம் கேட்டு ஏகே இழந்து வருகிறார். இன்றைய தமிழ் சினிமா உள்ள சூழலில் ஸ்டார் வேல்யூ பார்த்து படங்கள் வெற்றி பெறுவது இல்லை. ரஜினி கமல் படங்கள் கூட கதை இல்லாவிட்டால் ஓடாது என்கிற நிலை தான் உள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் கூட கதை இருந்தால் 100 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறது. இது புரியாமல் அஜீத்குமார் சம்பளத்தில் முரண்டு பிடிப்பது அவரது ரசிகர்களுக்கே விரக்தியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்