- Advertisement -
Homeபொழுதுபோக்குபொய் பேசுன நடிகனை நம்பி ரீல்ஸை நம்பி ஓட்டுப் போட்டீங்க, உண்மையா இருந்த கேப்டனை நீங்க...

பொய் பேசுன நடிகனை நம்பி ரீல்ஸை நம்பி ஓட்டுப் போட்டீங்க, உண்மையா இருந்த கேப்டனை நீங்க ஜெயிக்க வைக்கலே, இப்போ குத்துதே குடையுதேன்னு அழுதா என்ன பண்றது? – பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

- Advertisement -

கடலூரில் கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, தேமுதிகவுக்கு எத்தனை பேர் மனசாட்சியோட ஓட்டுப் போட்டீங்கன்னு நீங்களே சுயபரிசோதனை பண்ணுங்க. என் மக்களே மக்களே மக்களேன்னு மக்களுக்காக மட்டுமே வாழ்ந்தவர் கேப்டன்.

ஆனால் அவருக்கு எல்லாம் வாய்ப்பு தரமாட்டாங்க மக்கள். ஏமாத்தறவங்க பொய் சொல்றவங்க நாடகம் நடிக்கிறவங்களை நம்பி ஓட்டு போடுவாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு நாம என்ன செய்ய முடியும்? கோரிக்கை மட்டும் பார்த்தீங்க என்றால் மலை மாதிரி குவியுது. இதை செய்ங்க அதை செய்ங்க இந்த 3 மாசத்துல ஒரு லட்சம் மனுக்களை நான் வாங்கியிருக்கேன்.

- Advertisement -

அதை ஆய்வு செய்யறோம். மக்கள் கோாிக்கைகளை நிறைவேத்தச் சொல்லி அமைச்சர்கள் அதிகாரிகள்கிட்ட கொடுக்கிறோம். நேரடியாகவும் அவங்க கிட்ட சொல்றோம். ஆனா உண்மையில் மக்களுக்காக உழைக்கறவர்களுக்கு நீங்க சப்போர்ட் பண்ணுங்க. அதை பண்ணாமல் மாத்தி ஓட்டுப் போட்டுட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா நாங்க என்ன பண்ண முடியும்?

தமிழ்நாட்டுல இருக்கிற 234 தொகுதிகளில் இப்படி கிராமம் கிராமமா வந்து மக்களை சந்திக்கிற ஒரு எம்எல்ஏவை சொல்ல முடியுமா உங்களால்? மக்களுக்காக யார் பேசறாங்க? மக்களுக்காக யார் உழைக்கறாங்க என்பதை மக்கள் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

சும்மா வந்து ரீல்ஸ் போடறது போட்டோ ஷூட் பண்றது இந்த மாதிரி ஏமாத்தறவங்களை மக்கள் நம்பறீங்க. அப்புறம் குழந்தைங்க சொன்னாங்க பேரன் பேத்தி சொன்னாங்கன்னு ஓட்டை மாத்தி போடறீங்க. அந்த பேரன் பேத்தி வந்து உங்க பிரச்னைக்கு துணையா நிற்பாங்களா? அவங்களால் என்ன பண்ண முடியும்?

விருத்தாச்சலம் தொகுதிக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா தொகுதிகளிலும் மக்களுக்காக யார் உழைக்கிறார்களோ, மக்கள் மீது யாருக்கு உண்மையான அக்கறை இருக்கிறதோ அவர்களுக்கு மக்கள் சப்போர்ட் செய்ய வேண்டும். மக்களுக்காக உழைப்பவர்களுக்கு மக்கள் சப்போர்ட் செய்ய வேண்டும். இது எந்த கட்சியாக எந்த தொகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. மக்களுக்காக உழைப்பவர்களே முக்கியம் என்று பிரேமலதா விஜயகாந்த் அப்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்