- Advertisement -
Homeபொழுதுபோக்குகைவிட்ட ரஜினிகாந்த்.. டான் இயக்குநரின் அடுத்த மூவ் என்ன தெரியுமா? இவர்தான் ஹீரோவா?

கைவிட்ட ரஜினிகாந்த்.. டான் இயக்குநரின் அடுத்த மூவ் என்ன தெரியுமா? இவர்தான் ஹீரோவா?

- Advertisement -

அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சிபி சக்கரவர்த்தி. அவர் அட்லீயிடம் வேலையை கற்றுக்கொண்டு சிவகார்த்திகேயனை வைத்து டான் என்ற தனது முதல் படத்தை இயக்கினார். வழக்கமான கமர்ஷியல் கதைதான் என்றாலும் சிபி சக்கரவர்த்தியின் மேக்கிங்; படத்தின் கடைசியில் இருந்த எமோஷன் ஆகியவை ஒர்க் அவுட் ஆக படம் மெகா ஹிட் ஆனது. இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் பெற்ற இயக்குநராக மாறினார். மேலும் சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்டாக அமைந்தது டான்.

படமும் 100 கோடி ரூபாய் வசூலித்ததால் முதல் படமே நூறு கோடி ரூபாய் வசூல் எடுத்த இயக்குனர் என்ற பெயர் எடுத்தார். இதனையடுத்து சிபி சக்கரவர்த்திக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ரஜினிகாந்த் டான் படத்தைப் பார்த்து பாராட்டி சிபி சக்கரவர்த்தியை அழைத்து கதை கேட்டதாக கூறப்பட்டது. அதற்கு சிபி சக்கரவர்த்தி ஒன் லைன் ஒன்றை சொன்னதாகவும் அது ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

இதன் காரணமாக சிபி சக்கரவர்த்தி லைகா தயாரிப்பில் ரஜினிகாந்தை கூடிய விரைவில் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியிடம் சொன்ன ஒன் லைனை சிபி சக்கரவர்த்தி டெவலப் செய்து கதையாக ரஜினியிடம் சொன்னபோது அது அவருக்கு திருப்திகரமாக இல்லை என்றும் அதனால் சிபி சக்கரவர்த்தியை ரஜினி கழற்றிவிட்டு விட்டார் என்றும் இடையில் தகவல்கள் வெளியாகின.

இதனை அடுத்து அவர் வேறு எந்த ஹீரோ உடனும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இதற்கிடையே மீண்டும் சிவகார்த்திகேயனையே வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்ததாக தெரிந்தது. ஆனால் சிவகார்த்திகேயனோ மாவீரன், ராஜ்குமார் பெரியசாமி படம் என அடுத்தடுத்து பிஸியாக இருப்பதால் சிபி சக்கரவர்த்தியை ஒரு வருடம் காத்திருக்குமாறு கூறியதாக கோலிவுட்டில் இருந்து தகவல்கள் கசிந்தன.

- Advertisement -

இந்நிலையில் சிபி சக்கரவர்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தெலுங்கு நடிகர் நானியை வைத்து அவர் படம் இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. நானிக்கும் தமிழில் ஒரு பெரிய ஹிட் தேவைப்படுவதால் இந்த படம் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. சிபிச் சக்கரவர்த்தியும் இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க காத்திருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகலாம்.

- Advertisement -

சற்று முன்