நடிகர் ஜெயம் ரவி காஜல் அகர்வால் கேஎஸ் ரவிக்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் கோமாளி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தை தொடர்ந்து அவர் இயக்கி நடித்த படம் லவ்டுடே. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று ரூ. 100 கோடி வசூலை கடந்தது.
கோமாளி லவ் டுடே படங்களை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நேற்று டிராகன் படம் வெளியானது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கௌதம் மேனன் மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படத்துக்கு 2 நாட்களாக பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் அடாவடித்தனமான ஒரு மாணவராக பிரதீப் ரங்கநாதன் வித்யாசமான நடிப்பை தந்திருக்கிறார். லவ் டுடே படம் போல டிராகன் படமும் மிகப்பெரிய அளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் போல இருப்பதாக, டிராகன் படத்தின் டிரெய்லரை பார்த்த பலரும் விமர்சித்த நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் டான் படத்துக்கும் இந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த படம் டான் படத்தை விட பலமடங்கு வேற லெவலில் இருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்.
டிராகன் படத்துக்கு விமர்சன ரீதியாக கிடைத்துள்ள இந்த வெற்றியால் இயக்குனர் மற்றும் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். ஏனெனில் அவரது இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லைக் படம் அடுத்து வெளிவர இருக்கிறது. அதனால் வியாபார ரீதியாக லைக் நல்ல லாபம் பெறும். டிராகன் பட வெற்றியால் லைக் படமும் பெரிய கவனமும் வெற்றியும் பெற்று தனக்கு கம்பேக் தரும் என்று விக்னேஷ் சிவன் ஆனந்தமாக உள்ளார்.
அதே போல் டிராகன் படத்தை இயக்கிய டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து அடுத்து நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 51வது படத்தை இயக்க உள்ளார். அதனால் அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை பெற உள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வரும் சிம்புவின் 51வது படம் மீது ரசிகர்களின் கவனம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிராகன் போலவே சிம்புவுக்கும் மாஸ் கம்பேக் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தருவார் என்று எஸ்டிஆர் ரசிகர்கள் அதீத நம்பிக்கையில் உள்ளனர்.





