- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை சொன்னா உங்களுக்கு புரியாது சார்… சுடச்சுட வெளியான டிராகன் பட டிரெய்லர் - ரசிகர்களின்...

அதை சொன்னா உங்களுக்கு புரியாது சார்… சுடச்சுட வெளியான டிராகன் பட டிரெய்லர் – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாரா பிரதீப் ரங்கநாதன்?

- Advertisement -

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது போல, முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். ஜெயம் ரவி கேஎஸ் ரவிக்குமார் யோகி பாபு ஆர்ஜே ஆனந்தி ராமர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்த படம் லவ் டுடே. அவருடன் இவானா ராதிகா சரத்குமார் சத்யராஜ் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காதலர்கள் செல்போன்களை மாற்றிக்கொண்டால் நடப்பது என்ன என்ற கதைக்களத்தில் உருவான இந்த படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.

- Advertisement -

அடுத்து ஓ மை கடவுளே படத்தின் டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் மேனன் மரியம் ஜார்ஜ் சினேகா மற்றும் விஜே சித்து அர்ஷத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ரைஸ் ஆப் தி டிராகன், வழித்துணையே ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டிராகன் படம் வருகிற 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் டிராகன் படத்தின் டிரைலர் இன்று மாலை படக்குழு வெளியிட்டது. டிராகன் படம் கலாட்டா செய்யும் அடாவடியான கல்லூரி மாணவனின் கதை என்பதும் காதல் நட்பு படிப்பு என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதையும் டிரெய்லரில் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் படம் வெளியாகும் அதே 21ம் தேதியன்று நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுமே காதலை மையப்படுத்திய படங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் டிராகன் படத்தின் டிரெய்லர் காட்சிகள் பிரதீப் ரங்கநாதனின் அசத்தலான நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிராகன் டிரெய்லர் வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும்;https://youtu.be/qIBZlbJ7NUE?si=B-TZEH2kStijYBBZ

- Advertisement -

சற்று முன்