- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகளும் வருகிறதா? அப்ப படமே வேற லெவல் சம்பவமா இருக்குமே…? கொண்டாட்டத்தில்...

ஜனநாயகன் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகளும் வருகிறதா? அப்ப படமே வேற லெவல் சம்பவமா இருக்குமே…? கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்வதே தனது லட்சியம் என்று சவால்விட்டு அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் தவெக கட்சியில் 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இதற்கிடையே அவரது நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஜனநாயகன் படத்துக்கு பின் நடிக்க மாட்டேன். இதுவே என் கடைசி படம் என ஏற்கனவே விஜய் அறிவித்துள்ள நிலையில், அரசியலில் இருந்தாலும் அவர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு படமாவது நீங்கள் நடிக்க வேண்டும் என்று சில நடிகர்களும் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் விஜய் தான் இப்போது தமிழில் நம்பர் 1 நடிகராக முன்னணியில் இருந்து வருகிறார்.

ஆனால் ஜனநாயகன் படப்பிடிப்பில் நடிகை மமிதா பைஜூவிடம் விஜய் பேசிக்கொண்டிருந்த போது, ஜனநாயகன் படம்தான் கடைசியா என்று தெரியவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகுதான் எதையும் உறுதியாக சொல்ல முடியும் என்றும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதனால் ஒருவேளை விஜய்க்கு தேர்தலில் எதிர்பார்த்த ரிசல்ட் வராத பட்சத்தில் மீண்டும் சினிமாவுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. குறிப்பாக விஜய் நடிக்க வேண்டிய போர்ஷன் எல்லாமே எடுத்து முடித்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது சில தினங்களாக கரூர் ஈரோடு சிவகங்கை கோவை திருப்பூர் மதுரை என பல பகுதிகளில் ஜனநாயகன் படக்குழுவினர் சில காட்சிகளை எடுத்து வருகின்றனர்.

அதாவது இந்த ஊர்களில் தேர்தல் நடப்பது போலவும் வாக்கு சாவடி மையங்களில் மக்கள் ஓட்டுப் போடுவது போலவும் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். அதனால் ஜனநாயகன் படத்தில் விஜய் அரசியலில் ஜெயிப்பது போல, முதலமைச்சர் பதவிக்கு வருவது போன்ற காட்சிகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதையறிந்த தவெக கட்சி தொண்டர்களும் தளபதி ரசிகர்கள், வேற லெவல் சம்பவம்தான் என உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்