- Advertisement -
Homeபொழுதுபோக்குஓவர் ஸ்பீடில் மற்ற மலையாள படங்களை ஓவர்டேக் எடுத்த எல்2 எம்புரான் - தரமான சம்பவத்தை...

ஓவர் ஸ்பீடில் மற்ற மலையாள படங்களை ஓவர்டேக் எடுத்த எல்2 எம்புரான் – தரமான சம்பவத்தை இரண்டே நாட்களில் செய்து விட்டதா?

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் இடையே சில முக்கியமான வித்யாசங்கள் உள்ளன. அதாவது கதையை நம்பி படம் எடுப்பதும் யதார்த்தங்களை படமாக்குவதும் மலையாள சினிமா. ஹீரோவை நம்பி படம் எடுப்பதும், கமர்ஷியல் என்ற பெயரில் சாத்தியமே இல்லாத பில்டப்புகளை மட்டுமே படமாக்குவதும் தான் தமிழ் சினிமா.

இதில் விதிவிலக்காக குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் பார்க்கிங் லப்பர் பந்து மகாராஜா குரங்கு பொம்மை சித்தா பண்ணையாரும் பத்மினியும் போன்ற யதார்த்த படங்கள் வெளியாகி அவ்வப்போது தமிழ் சினிமாவின் பெருமையை காப்பாற்றி விடுகின்றன. கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் இந்த படங்கள் ரசிகர்களின் மனதில் தங்கியும் விடுகின்றன.

- Advertisement -

அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் நெல்சன் கார்த்திக் சுப்பராஜ் சிறுத்தை சிவா போன்ற இயக்குனர்கள் வன்முறை படங்களை கதையாக்கி கமல் விஜய் ரஜினி சூர்யா போன்றவர்களை ஹீரோவாக்கி கோடி கோடியாக வசூலித்து வங்கி கணக்குகளை நிரப்பிக் கொள்கின்றனர். ஆனால் மலையாள படங்களில் ஹீரோவாக எப்போதுமே ஜெயிப்பது கதையாக மட்டுமே இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான படம் லூசிபர். படத்தில் நாயகனாக மோகன்லால் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அந்த படத்தின் தொடர்ச்சியாக எல்2 எம்புரான் கடந்த 27ம் தேதி வெளியானது. மீண்டும் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மோகன்லாலுடன் மஞ்சுவாரியார் பிருத்விராஜ் மற்றும் டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் பாகம் போல 2ம் பாகம் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை என்று படம் பார்த்த ஒரு தரப்பினர் கூறினாலும் படம் பார்த்த பலரும் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனத்தை கூறி வருகின்றனர்.

நேற்று முன்தினம் 27ம் தேதி எல்2 எம்புரான் படம் வெளியாகி உலகளவில் முதல் நாளில் ரூ. 22 கோடி வசூலித்த நிலையில் 2ம் நாளில் நேற்று மொத்தம் ரூ. 100 கோடி வசூலை தாண்டியிருப்பதாக படத்தின் கதாநாயகன் நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் 48 மணி நேரத்தில் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள படம் என்ற சாதனையை எல்2எம்புரான் படம் செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்