- Advertisement -
Homeபொழுதுபோக்குநிலங்களை அபகரித்து மோசடி செய்த வழக்கு - நடிகை கெளதமியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி...

நிலங்களை அபகரித்து மோசடி செய்த வழக்கு – நடிகை கெளதமியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் தீவிர விசாரணை

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌதமி. கடந்த 1980 – 90களில் தமிழில் பல வெற்றிப் படங்களில் கௌதமி நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படம் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் கௌதமி.

தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் உடன் தேவர் மகன் நம்மவர் பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழில் மட்டும் இன்றி மலையாளம் தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை கௌதமி. அவரது திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கௌதமி ஈடுபட்டு வந்தார். ஆரம்பத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கௌதமி பிறகு அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை கௌதமி அதன் பின்னர் வேறு எந்த அரசியல் கட்சியிலும் இணையவில்லை.

தொடர்ந்து திரைப்படங்களில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகை கௌதமிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை அபகரித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -

இந்த வழக்கு தொடர்பாக அமலாகக்கத்துறை தரப்பிலும் தனிப்பட்ட முறையில் விசாரணை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து நடிகை கௌதமி நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை கௌதமியிடம் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் விசாரணையின் போது என்னென்ன தகவல்கள் பெறப்பட்டன, எது மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

- Advertisement -

சற்று முன்