தமிழ் சினிமாவில் நடிகர் அஜீத்குமார் முன்னணி நடிகராக உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. விடாமுயற்சி படத்தில் ஏமாந்த ரசிகர்களை இந்த படத்தில் அஜீத்குமார் உற்சாகப்படுத்தி விட்டார்.
இப்போது நடிகர் அஜீத்குமார் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த கார் பந்தயம் வருகிற அக்டோபர் மாதம் வரை 10 நாடுகளில் நடக்கிறது. துபாய் பிரிட்டன் இத்தாலி போன்ற நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் நடிகர் அஜீத்குமார் மற்றும் அவரது அணி வெற்றிகளை பெற்றுள்ளது. அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் அவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை சினிமாவில் நடிப்பதை காட்டிலும் விளையாட்டில் அவருக்கு ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் இருந்தே பல பைக் பந்தயங்களில் கலந்துக் கொண்டவர் அஜீத்குமார். சினிமாவுக்கு வந்து பெரிய நடிகராக பிறகும் பைக்கில் நெடுந்தூரம் பயணம் செல்வதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அத்துடன் கார் பந்தயம் துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் அஜீத்குமாருக்கு அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் அஜீத்குமார் பங்கேற்ற ஒரு நேர்காணலில் உங்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகைகள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் அஜீத்குமார் சிறிதும் யோசிக்காமல் தனது பதிலை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அந்த நேர்காணலில் நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, நடிகர் திலகம் சிவாஜி சார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சார் அவர்களை பற்றி எல்லாம் பேச எனக்கு வயசு பத்தாது. அதனால் அடுத்த தலைமுறையில் நடிப்பை பொறுத்த வரைக்கும் கமல் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி ஸ்டைல்ன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா ரஜினி சாரை அடிக்க யாருமே கிடையாது.
அதனால் ஒவ்வொருத்தர் கிட்ட ஒவ்வொரு திறமை இருக்கு. அந்த திறமையை நான் மதிக்கிறேன். இப்போ லேட்டஸ்ட் டிரண்ட்ல நடிகர் பிரபுதேவா அவரோட டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகர் அஜீத்குமார் பேசியிருக்கிறார். இது கடந்த 1990களில் அஜீத்குமார் நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் வெளியான ஒரு நேர்காணல் என்பதும் குறிப்பிடத்தக்கது.





