- Advertisement -
Homeபொழுதுபோக்குசின்னதம்பி படத்தில் அப்படி ஒரு காமெடி கேரக்டரில் நடித்த நடிகர் கவுண்டமணி - பின்னணியில் இருந்தது...

சின்னதம்பி படத்தில் அப்படி ஒரு காமெடி கேரக்டரில் நடித்த நடிகர் கவுண்டமணி – பின்னணியில் இருந்தது நடிகர் சிவாஜியா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி காமெடி நடிப்பில் உச்சம் தொட்டவர். 16 வயதினிலே படத்தில் கூத்து வாத்தியார் கேரக்டரில் ரஜினியுடன் சில காட்சிகளில் கவுண்டமணி நடித்திருந்தார். பத்த வெச்சுட்டியே பரட்டை என்ற வசனம் மூலம் கவுண்டமணி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் பெட்டிக்கடை டெய்லராக காளியண்ணன் கேரக்டரில் பெரிய அளவில் கவனம் பெற்றார்.

அந்த படத்தில் சரோஜா குப்பை கொட்டறியா? கொட்டு கொட்டு என்கிற கவுண்டமணி டயலாக் இன்றும் டிரண்டிங்கில் ரசிக்கப்படுகிறது. கடந்த 1980களில் காமெடி நடிப்பில் நட்சத்திர நடிகராக கவுண்டமணி இருந்தார். கவுண்டமணி செந்தில் காமெடி இன்றும் வெகுவாக ரசிக்கப்படுகிறது. அவர்களது காமெடி காட்சிகளை இப்போதும் ரசிகர்கள் பார்த்து பார்த்து ரசித்து சிரிக்கின்றனர்.

- Advertisement -

நடிகர் கவுண்டமணி நடித்த படங்களில் சின்னதம்பி படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் மாலை 6 மணி ஆகிவிட்டால் பெரிய வீட்டு சமையல்காரரான கவுண்டமணிக்கு கண் பார்வை தெரியாது. மாலைக்கண் வியாதி இருக்கும். இதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க கவுண்டமணி செய்யும் தில்லுமுல்லு காமெடியாக இருக்கும்.

இந்த படத்தில் காமெடி டிராக் எழுதியவர் வீரப்பன். இவர் கவுண்டமணி செந்தில் நடித்த பல படங்களில் காமெடி டிராக் எழுதியவர். இவர் நாகேஷ் சந்திரபாபு நாகேஷ் போன்றவர்களுக்கு காமெடி டிராக் எழுதியவர் என்பதால் தனது படங்களுக்கு நிரந்தரமாக காமெடி டிராக் எழுத வைத்திருந்தார் கவுண்டமணி.

- Advertisement -

இந்த நிலையில் சின்னதம்பி படம் வெளியாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த தவப்புதல்வன் என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் மாலைக்கண் நோய் பாதிப்புள்ளவராக சீரியசான கதையில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.

இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடித்த மாலைக்கண் நோய் பாதிப்பை அப்படியே உல்டாவாக மாற்றி நடிகர் கவுண்டமணிக்கு, வீரப்பன் காமெடி டிராக் எழுதியிருந்தார். இது பெரிய அளவில் கவுண்டமணிக்கு வெற்றியை கொடுத்தது. சின்னதம்பி படத்தின் வெற்றிக்கும் பக்கபலமாக அமைந்தது. மாலைக் கண் நோயாளியாக இந்த படத்தில் கவுண்டமணி காமெடியில் அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்