- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்ட திரையரங்க உரிமையாளர்கள் - ஓடிடி ரிலீஸ் படங்களுக்காக கால அவகாசத்தை நீடித்த...

தயாரிப்பாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்ட திரையரங்க உரிமையாளர்கள் – ஓடிடி ரிலீஸ் படங்களுக்காக கால அவகாசத்தை நீடித்த திருப்பூர் சுப்ரமணியன்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் பொற்காலம் என கடந்த 1980 மற்றும் 1990களை கூறலாம். ஏனென்றால் அப்போதுதான் ரசிகர்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சகமாக எல்லாவிதமான படங்களும் தமிழ் சினிமாவில் வெளியாகின. ரஜினி கமல் மட்டுமின்றி எஸ்வி சேகர் பாண்டியராஜன் விசு பார்த்திபன் பிரபு கார்த்திக் ராமராஜன் என எல்லா ஹீரோக்களின் படங்களும் வெளியாகின.

அதுமட்டுமின்றி நகரத்துக்கு கதைகள் கிராமத்து கதைகள் குடும்பத்து கதைகள் காமெடி கதைகள் என பலவிதமான திரைக்களங்களில் வித்யாசமான படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. நடிகர்களின் சம்பளமும் நியாயமாக இருந்தது. சினிமா டிக்கெட் விலையும் மிக குறைவாக இருந்தது. தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி விட்டது.

- Advertisement -

ஆனால் கடந்த 10 15 ஆண்டுகளாக தமிழ் சினிமா தாறுமாறான ஒரு நிலைக்கு போய்விட்டது. ரத்தக்களறியாக வன்முறை திரைக்களங்களில் உருவான படங்களை பார்த்து ரசிகர்கள் சலித்து அலுத்து போய்விட்டனர். நெல்சன் கார்த்திக் சுப்பராஜ் லோகேஷ் கனகராஜ் அட்லி போன்ற இயக்குனர்கள் கமர்ஷியல் என்ற பெயரில் குப்பை படங்களை தந்து சினிமாவை வேறுபாதையில் திருப்பி விட்டு விட்டனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஓடிடி தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியால் நடிகர்களின் சம்பளம் நூற்றுக்கணக்கான கோடிகளில் உயர்ந்து விட்டது. தயாரிப்பு செலவுகளும் பன்மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் 300 கோடி 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மட்டுமே படங்களை தயாரிக்கும் சூழலில் பல தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்பு நிறுவனங்களையே மூடிவிட்டனர்.

- Advertisement -

அதுவும் 4 வாரங்களில் ஓடிடி தளங்களுக்கு வந்துவிடும் புதிய படங்களால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமே வருவதில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டங்களை தியேட்டர் உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பட பூஜை துவங்கப்படும் புதிய படங்களுக்கு ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருப்பதாவது, 28 நாட்களில் ஓடிடி ரிலீஸ் என்னும் நடைமுறையால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடுமையான நெருக்கடியும் நஷ்டமும் ஏற்படுகிறது. அதனால் இனிமேல் படத்தின் வெளியீட்டு தேதியிலிருந்து 100 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் அந்த படத்தை வெளியிட வேண்டும். அவர்களுக்கு மட்டுமே தியேட்டர் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். 2026 ஜனவரி முதல் தேதியில் இருந்து பூஜை போடும் படங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்