தமிழ் சினிமா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்சன் களமாக மாறியிருக்கிறது. 90 சதவீத படங்கள் ரத்தம் கத்தி துப்பாக்கி வெடிகுண்டு சத்தம் போதை பொருள் கடத்தல் மனித உறுப்புகள் கடத்தல் என குற்றச் சம்பவங்களை மையப்படுத்திய படங்களாகவே பெரும்பாலும் வருகின்றன.
அதே நேரத்தில் குட்நைட் லப்பர் பந்து குடும்பஸ்தன் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற சில படங்களும் அத்தி பூத்தது போல வந்து தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் காப்பாற்றுகின்றன. எனினும் பெரிய நட்சத்திர ஹீரோக்கள் இன்னும் வன்முறை படங்களை விட்டு வெளியே வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் இப்போது தமிழ் சினிமாவின் ஜானர் திடீரென வேறு கோணத்துக்கு மாறியிருக்கிறது. ஹீரோக்களுக்கு ஆக்சன் படங்கள் என்றால் இனி ஹீரோயின்களுக்கு கிளாமர் படங்கள் என்ற புதிய ஜானர் உருவாகும் போல தெரிகிறது. அதற்கு முதல் உதாரணமாக இப்போது ஒரு படம் திரைக்கு வந்திருக்கிறது.
நடிகர் விமல் நாயகனாக நடித்த வாகை சூடவா படத்தில் நாயகியாக நடித்தவர் இனியா. இதில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த சில படங்களில் கவர்ச்சியாகவும் நடித்தார். இப்போது ஸ்வீட்டி நாட்டி கிரேஸி என்ற படத்தில் இனியா மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக திரிகுண் என்பவர் நடித்துள்ளார். ஸ்ரீ ஜீதா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீ ஜீதாவின் அக்காவாக இனியா நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோவின் மாமியாராக சுந்தரா டிராவல்ஸ் பட நாயகி நடிகை ராதா நடித்திருக்கிறார். ஹீரோ மற்றும் இந்த 3 பெண்களை மையப்படுத்திய அடல்ட் கன்டன்ட் கதைக்களத்தில் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படம் உருவாகி உள்ளது. ராதா இனியா ஸ்ரீஜீதா ஆகிய 3 பெண்களுக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் கிளுகிளுப்பான விஷயங்களும் அதுசார்ந்த சம்பவங்களுமே முக்கியமான காட்சிகளாக இந்த படத்தின் கதைக்கருவாக உள்ளது.
ஏறக்குறைய இந்த படம் மலையாளத்தில் ஷகிலா நடித்த ஒரு படத்தை பார்த்த மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. தமிழில் முதல் தடவையாக நடிகை இனியா கிளாமர் ஜானர் படத்தில் நடித்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தும் படம் என்றாலும் துணிச்சலாக நடித்திருக்கிறார். அவர் இரட்டை அர்த்த வசனங்களையும் சகஜமாக பேசி நடித்திருக்கிறார். சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதாவும் முதன்முறையாக கவர்ச்சி நாயகியாக இந்த படத்தில் வருகிறார். அவரது கணவர் ரோலில் தம்பி ராமையா நடித்துள்ளார்.





