- Advertisement -
Homeபொழுதுபோக்குவருகிற 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாகை சூடுமா? தமிழக முதல்வராக...

வருகிற 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாகை சூடுமா? தமிழக முதல்வராக விஜய் ஜெயிப்பாரா? – வயிற்றில் புளியை கரைத்த பிரபல ஜோதிடர்!

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் அதிக கவனம் பெற்றவராக இப்போது இருந்து வருகிறார். எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய விஜயின் அரசியல் பிரவேசம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், இன்னும் தவெக கட்சியுடன் எந்த கட்சிகள் கூட்டணி என்பது முடிவாகவில்லை.

இந்நிலையில் விஜய் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை. ஆனால் பாஜக அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே விஜய் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் எப்படியும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கருதும் மக்கள், நிச்சயமாக தவெக கட்சிக்கு வாய்ப்பளித்து விஜயை ஜெயிக்க வைப்பார்கள் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி என்பவர், நடிகர் விஜய் குறித்தும் தவெக கட்சி குறித்தும் பேசியிருப்பது இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. வருகிற 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். நடிகர் விஜய்க்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லை என்றும் ஜோதிடர் பிரசாந்த் கினி கணித்து கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் முடிவுகளை துல்லியமாக கணித்தவர் பிரசாந்த் கினி என்ற நிலையில், இவரது தற்போதைய இந்த கணிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிடர் பிரசாந்த் கினி இதற்கு முன் நடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் வெளியிட்ட கணிப்புகள் மிகவும் சரியாக பலித்திருக்கின்றன. இந்த கணிப்புகளின் நம்பகத்தன்மை பின்னணியில் தற்போது அவர் தவெக வின் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்ட தகவல் அதிக கவனம் பெற்றுள்ளது.

- Advertisement -

வருகிற 2026 சட்டசபைத் தேர்தல் குறித்து பேசிய ஜோதிட வல்லுனர் பிரசாத் கினி, இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற மாட்டார். இந்த தேர்தலில் பெரிய பாதிப்பு எதையும் தமிழக வெற்றிக்கழகம் ஏற்படுத்தாது என்றும் உறுதியாக கூறியுள்ளார். விஜயின் தவெக கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். தேர்தலில் கண்டிப்பாக தோல்வியடையும்.

அதிலும் கட்சியின் தலைவர் நடிகர் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு சுத்தமாக இல்லை என்றும் அவர் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். அவரது இந்த ஜோதிட கணிப்பு விஜய் கட்சியின் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே பலத்த ஏமாற்றத்தை, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இந்த தேர்தல் முடிவு குறித்த ஜோதிட கணிப்பு பெரும் விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

- Advertisement -

சற்று முன்