- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தை கழுவி ஊத்தியும் இவங்க திருந்தலையே, பான் இந்தியா என்ற பெயரில் இப்படி ஒரு...

லியோ படத்தை கழுவி ஊத்தியும் இவங்க திருந்தலையே, பான் இந்தியா என்ற பெயரில் இப்படி ஒரு மோசடியா? – இயக்குநரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், கடந்த 19ம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆனது. அதீத எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த படம், 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலித்து வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாக வெற்றிப்படமாக இருந்தாலும், விமர்சன ரீதியாக இது மிகப்பெரிய தோல்வி படம் என்றே கூறப்படுகிறது.

ஏனெனில் இந்த படம் ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதாவது படத்தின் இடைவேளை வரை, அந்த படமே விஜயை ஹீரோவாக வைத்து படமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த காபி ஷாப் சண்டை எல்லாம் அந்த படத்தில் வந்த அப்பட்டமாக ஜெராக்ஸ் காப்பி காட்சிகள்தான்.

- Advertisement -

இடைவேளை வரை ரசிக்கப்பட்ட அந்த படத்தில், புதிய சரக்காக சேர்க்கப்பட்டது அந்த முதலில் வரும் ஹய்னா சண்டை காட்சி மட்டும்தான். மற்றபடி எல்லாமே ஈயடிச்சான் காப்பி தான். அதனால்தான் இடைவேளைக்கு பிறகு கதையை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் தடுமாறி தவித்து, நரபலி விஷயத்தை கொண்டு வந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் மீது ரசிகர்கள் மிகுந்த மரியாதை, தன்னம்பிக்கை வைத்தனர். கைதி, விக்ரம் போன்ற படங்களை தந்த இவர், லியோ படத்தை வேற லெவலில் கொண்டு செல்வார் என எதிர்பார்த்த நிலையில், பழைய ஹாலிவுட் படத்தை பார்த்து, அதையே ரீமேக் செய்வது போல லியோ படத்தை அவர் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

படத்தின் பின்பகுதியை எப்படி முடிப்பது என தெரியாததால், இந்த 2023ல் அபத்தமான நரபலி சப்ஜெக்டை கொண்டு வந்து, ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார். இதில் இருந்து தப்பிப்பதற்காக மன்சூர் அலிகான் சொன்ன பிளாஸ்பேக் கதை பொய்யென்று பின்வாங்குகிறார். இந்த பிளாஸ்பேக்கை ரசிகர்கள் ஏற்று கொண்டாடி இருந்தால், இதுதான் உண்மையான பிளாஸ்பேக் என்று தயங்காமல் உண்மையை சொல்லி இருப்பர்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தின் டீசர் வெளியானது. நாயகன் படத்துக்கு பிறகு மணிரத்னம்-கமல் இணையும் இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஆனால், இது கடந்த 2019ம் ஆண்டில் வெளிவந்த தி ரைஸ் ஆப் ஸ்கை வாக்கர் என்ற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமாக காப்பி, தி தக்கி என்ற ஆங்கில புத்தக கதையின் தழுவல் என்பதும் உறுதியாகி இருக்கிறது. கதை, கற்பனை வறண்டு போய் பாலைவனமாகி விட்ட நம் தமிழ்பட இயக்குநர்கள், பழைய கதைகள், பழைய படங்களை பார்த்து, கதைகளாக்கி, அதில் சில உல்டா சீன்களை உள்ளே நுழைத்து, பான் இந்தியா படம் என்ற பெயரில், மீண்டும் ரசிகர்களை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய்களை அபகரிக்க வருகின்றனர் என, நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்