- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னதாம்பா ஆச்சு உங்களுக்கு… குடும்பமே இப்படியா? - தலையில் அடித்துக்கொள்ளாத குறையாத புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்

என்னதாம்பா ஆச்சு உங்களுக்கு… குடும்பமே இப்படியா? – தலையில் அடித்துக்கொள்ளாத குறையாத புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்துக்கு பிறகு மிகவும் மதிக்கப்படுகிறத ஒரு நட்சத்திர கலைக் குடும்பமாக இருப்பது நடிகர் சிவக்குமார் குடும்பம்தான். தமிழ் சினிமாவில் மிகவும் சீனியர் நடிகர். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல், விஜய், அஜீத் என 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயர் என அழைக்கப்பட்டவர். 80 வயது கடந்தும் இன்னும் சிறந்த பேச்சாளராக அவர் பல மேடைகளில் பேசி வருகிறார்.

ஆனால் சிவக்குமார், சில பொது இடங்களில் தன்னிலை மறந்து செயல்பட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். உதாரணமாக தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட ஒரு வாலிபரில் செல்போனை தட்டிவிட்டு உடைத்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வாலிபருக்கு அவரே புது செல்போன் வாங்கிக் கொடுத்தார். சமீபத்தில், சால்வை போடுவதற்காக ஒருவர் கையில் வைத்திருந்த சால்வையை பிடுங்கி எறிந்தார்.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அரும்பாடுபட்டு முன்னுக்கு வந்தவர். நல்ல நடிகராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அவர், இப்போது தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருகிறார், இயக்குனர் பாலாவின் வணங்கான், வெற்றிமாறனின் வாடி வாசல், சுதா கொங்காராவின் புறநானூறு போன்ற படங்களை புறக்கணித்து, வெளியேறிய அவர் இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் வேண்டாம் என மறுத்த கதையில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவக்குமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி கார்த்தியும் நல்ல நடிகராக மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர். அவரது 25வது படம் ஜப்பான், இப்படி ஒரு மோசமான படத்திலும் நடிக்க முடியுமா என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த படத்தில் நடித்து, பெயரை கெடுத்துக்கொண்டார். இப்போது மிகப்பெரிய சர்ச்சையை, விமர்சனத்தை சந்தித்த அனிமல் பட டைரக்டர் சந்தீப் வங்கா ரெட்டியுடன் இணைந்து, அவரது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மருமகளும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார் மற்றும் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி சினிமாவில் நடித்து வருகிறார். சென்னையில் இருந்தால் நடிக்க விடமாட்டார்கள் என்பதால், சூர்யா மற்றும் தனது பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறி, அங்கிருந்து தன் விருப்பம்போல சினிமாவில் நடித்து வருகிறார். சூர்யா அதை தடுக்க முடியாமல், ஜோதிகாவை கண்ட்ரோல் பண்ண முடியாமல் தவிக்கிறார்.

இப்படி சிவக்குமார் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவது, நல்ல படங்களை எல்லாம் சூர்யா புறக்கணித்து வெளியேறுவது, கார்த்தி, சர்ச்சை இயக்குனருடன் கைகோர்ப்பது, குடும்பத்தை இரண்டாக பிரித்த ஜோதிகா என, சிவக்குமார் குடும்பத்தில் நடந்து வரும் விஷயங்களை பார்த்து நொந்து போன சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ரசிகர்கள், என்னதாம்பா ஆச்சு உங்களுக்கு, குடும்பமே இப்படியா என விரக்தியில் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பி தீர்க்கின்றனர்.

சற்று முன்