- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு படத்துல நடிக்க 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்குறது நீங்க, நடிகர் சங்கம்...

ஒரு படத்துல நடிக்க 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்குறது நீங்க, நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட பொதுமக்கள் நிதி கொடுக்கணுமா? – கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்

- Advertisement -

இப்போது தமிழ் சினிமா எந்த பாதையில் கொண்டிருக்கிறது என்று தெரியாத அளவுக்கு, மிக மோசமான நிலையில் உள்ளது. 1960, 70, 80களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மீது அக்கறை கொண்ட ஒரு துறையாக இருந்தது. பல்வேறு சமுதாய கருத்துக்கள், நல்ல சிந்தனைகள் கொண்ட கதைகள் படங்களில் இருந்தன. குடும்ப பாசம், காதல், நகைச்சுவை, உறவுகளில் மரியாதை என ஒரு படம் என்பது, சகல விதங்களிலும் திருப்தியாக இருந்து, ரசிகனுக்குவாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுத்தது.

ஆனால் இப்போது லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன், நெல்சன், அட்லி, மாரி செல்வராஜ், பா ரஞ்சித் போன்றவர்களின் கையில் சிக்கி இருக்கிறது. இன்றைய தமிழ் சினிமா, ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை தந்து வருகிறது, அதற்கேற்ப கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோக்களும், கமர்சியல் என்ற பெயரில் நூறு கோடி, இருநூறு கோடி சம்பளம் வாங்கினால் போதும் என்ற ஒரே முடிவில், எப்படி வேடுமானாலும் நடித்துவிட்டு போக தயாராக இருக்கிறார்கள்.

- Advertisement -

ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு, ஒரு கதாநாயகனாக இந்த கேரக்டரில் நான் நடிப்பதால் என்னுடைய நடிப்பாற்றல் எந்த விதத்தில் வெளிப்பட போகிறது, இந்த படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன நன்மை, இந்த கதை எதைச் சொல்கிறது, இந்த கதை மூலம் மக்களுக்கு சொல்லப் போவது என்ன என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் ஹாலிவுட் போல படம் எடுக்கிறேன், ஆக்சன் படம் எடுக்கிறேன் என வந்துவிடுகின்றனர். கற்பனை வறட்சி நிறைந்த சரக்கே இல்லாத இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் பெருகிவிட்டனர்.

இந்த சூழலில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் தேவை என்பதால், இப்போது முன்னணி நடிகர்களிட் ஒரு கோடி ரூபாய் வீதம், நடிகர் சங்கம் வசூலித்து வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவால் ரசிகர்களுக்கு படம் பார்க்க சென்றால், நேரம் விரயம், பணம் விரயம் என்ற நிலையில்தான் இன்றைய தமிழ் சினிமா படங்கள் இருக்கின்றன. மிக மோசமான படங்களுக்கு உதாரணமாக தமிழ் சினிமாவை சொல்லும் அளவுக்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சூழலில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு பொதுமக்கள் நிதி உதவி வழங்க வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் நாசர் கேட்டு இருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பொதுமக்களும் நன்கொடை வழங்கலாம். வங்கி விவரங்கள் தென்னிந்திய நடிகர் சங்கம் இணையதளத்தில் உள்ளது என்று அறிவித்திருக்கிறார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.

ஒரு படத்தில் நடிக்க 100 கோடி, 200 கோடி நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களை விட்டுவிட்டு, தங்களது வியர்வை சிந்திய உழைப்பில் வரும் பணத்தை, பெரும் பகுதியை சினிமா பார்க்க அழுது கொண்டிருக்கும் ரசிகர்கள், இனி நடிகர் சங்க கட்டடம் கட்டவும் நிதி தர வேண்டுமா என்று நெட்டிசன்கள் கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர். ஏன் டிக்கெட் என்ற பெயரில் ஒவ்வொரு படத்திலும் கோடிக்கணக்கில் ரசிகர்களை ஏமாற்றி பறிப்பது போதாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்