தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. கடந்தாண்டில் அவரது நடிப்பில் வெளியான மகாராஜா படம் மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்றது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. சீனாவில் வெளியான மகாராஜா படம் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
துணை நடிகராக இருந்து பிறகு ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதிக்கு ஆரம்பத்தில் சில படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தன. குறிப்பாக தென்மேற்கு பருவக்காற்று பீட்சா சூது கவ்வும் ரம்மி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நானும் ரவுடிதான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தர்மதுரை போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடிப்பு பாராட்டை பெற்றது.
முன்னணி நடிகராக மாறிய பிறகு ஹீரோ வில்லன் கேமியோ ரோல் என மாறி மாறி நடித்து ரசிகர்களை அப்செட் செய்த நடிகர் விஜய் சேதுபதி இனி நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற ஏற்கனவே கூறிவிட்டார். அதே நேரத்தில் நல்ல கதைகளில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஏஸ் படம் இதுவரை 6.2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துளளது.
இயக்குனர் ஆறுமுக குமார் டைரக்ஷனில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் கடந்த 23ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு திவ்யா பிள்ளை பப்லு ராஜ்குமார் பிஎஸ் அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் ஏஸ் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் போல்ட் கண்ணன் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
இந்த படத்தை 7 சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரிய பட்ஜெட் படமாக தயாரித்துள்ளது. படம் முழுவதும் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ஏஸ் படத்தில் விஜய் சேதுபதி போல்ட் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரும் யோகி பாபுவும் நடித்த சில காமெடி காட்சிகள் மட்டுமே படத்தில் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. மகாராஜா படம் போல ஏஸ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுத் தரவில்லை.
கடந்த 23ம் தேதி வெளியான ஏஸ் படம் 5 நாட்களில் உலக அளவில் மொத்தம் 6.2 கோடி ரூபாய்தான் வசூலித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டில் ஏஸ் படத்தின் மொத்த வசூல் 43 லட்சம்தான் ஆனது குறிப்பிடத்தக்கது. ஏஸ் படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து மிகக்குறைவான வசூலை தான் தமிழ்நாட்டில் பெற்று வருகிறது. கடந்தாண்டில் மாஸ் ஹிட் ஆக மகாராஜா படம் கொடுத்த மக்கள் செல்வன், ஏஸ் படத்தில் சொதப்பி வாய்ப்பில்ல ராஜா என்று சொல்லாமல் சொல்லி விட்டாரே என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.





