- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே நாளில் அஜீத்குமாரின் ஒட்டுமொத்த சோலியை முடித்து விட்ட விஜய், உங்க நண்பருக்கு போன்...

ஒரே நாளில் அஜீத்குமாரின் ஒட்டுமொத்த சோலியை முடித்து விட்ட விஜய், உங்க நண்பருக்கு போன் போடுங்க, ஒரு பட்டாளமே வரும் – ஏகேவை கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அனைவருக்கும் வணக்கம். போர்ச்சுக்கல்லில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளேன். வழக்கம் போல அனைவரும் வந்து ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன் என்று அதில் நடிகர் மற்றும் ரேஸர் அஜீத்குமார்
கூறியிருந்தார். இதுதான் இப்போது இணையத்தில் செம வைரலாகி, அஜீத்குமாருக்கு எதிரான கண்டனங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

லண்டனில் நடந்த கார் ரேஸின் போது தமிழக முதல்வர் விஜய் அங்கு வந்து போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திரிஷாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். விஜய் தங்களது ஜென்ம விரோதி என்ற நிலையில் இருந்த அஜீத்குமார் ரசிகர்களுக்கு இது பயங்கரமான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் அவர் ரசிகர்களிடம் ஆதரவு கேட்டு வீடியோவுக்கு ரசிகர்கள் பதில் வீடியோ போட்டு தங்களது எதிர்ப்பை கண்டனத்தை கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர் கூறியிருப்பதாவது, விஜய் ஒரு நாள் வந்து உங்களின் மொத்த இமேஜையும் உடைத்து விட்டு போயிட்டார். உங்களது எதிராக பேசுகிற உங்களது உண்மையான ஒவ்வொரு ரசிகரின் குமுறல் இதுதான்.

முதுகுல குத்தறது பிடிக்காது முதுகுல குத்தறது பிடிக்காதுன்னு நீங்களே சொல்லிட்டு உங்க ரசிகன் முதுகுல நீங்களே குத்திட்டீங்களே? இப்போ என்ன போர்ச்சுக்கல் கார் ரேஸ்க்கு ஆதரவுதானே வேணும்? அதுதான் உங்க நண்பர் சிஎம் ஜோசப் விஜய் இருக்காரே? அவருக்கு ஒரு போன் போடுங்க. ஒரு பெரிய பட்டாளத்தோட வந்து போர்சுக்கல்ல இறங்க போறாரு.

- Advertisement -

கூடவே அவர் ஃபிரண்டையும் கூட்டீட்டு வரப்போறாரு. இதுல என்ன பிரச்னை? அவருக்கு ஒரே ஒரு போன் கால் போடுங்க. உங்களுக்கு ரசிகன் எதுக்கு சார்? அவன் வந்தா ஒரு செல்ஃபி எடுக்க போறீங்களா? அவன் வந்து கைதட்டுனா பிடிக்காது, அவன் விசில் அடிச்சா பிடிக்காது. லண்டன்ல ஒரு பையன் வந்து செல்ஃபி எடுத்ததுக்கு அவனை அப்படி முறைச்சு பார்த்தீங்களே? அதை எப்பவும் நாங்க மறக்க மாட்டோம்.

அந்த பார்வையில் நாங்க எல்லாம் நொறுங்கிப் போயிட்டோம். கார் ரேஸ் ஜாம்பவான் கூட அப்படி பார்க்க மாட்டான். உலகத்துல மிகச்சிறந்த நடிகன் கூட அந்த பார்வை பார்க்க மாட்டான். அந்த ஆடிட்யூட் அஜீத் ரசிகர்களான எங்களுக்கு சுத்தமா பிடிக்கலே. பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்ன்னு சொல்வாங்க. ஆனா உங்க விஷயத்துல அந்த நாறோடு சேர்ந்து பூவும் நாறிப் போச்சு என்று ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்