தமிழ்நாட்டில் வெளிநாட்டில் உள்ளது போல பல கோடி ரூபாய் செலவில் மோட்டார் சிட்டி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தவுடன் அடுத்த சில மணி நேரங்களில் நடிகர் அஜீத்குமார் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்தார். இப்போது லண்டனில் அஜீத் பங்கேற்ற கார் ரேஸ்சை விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது இருவரும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டிய நிகழ்வுகள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் நடிகர் அஜீத்குமாரை அவரது ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்பேர்ப்பட்ட சுயநலவாதி என்று தெரியாமல் இத்தனை ஆண்டுகளாக உங்களை போய் கொண்டாடினாமே என்று ஆவேசமாக பேசி பதிவுகளை செய்து வருகின்றனர்.
அதில், இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன என்று ரசிகர்களை உசுப்பேத்தி விட்டீங்களே? அப்போது இப்போது உள்ள பக்குவம் இல்லையா? அப்பவே நீங்க கட்டிப்பிடிச்சு இப்படி போஸ் கொடுத்திருந்தால் உங்கள் ரசிகர்கள் சண்டை போட்டு அடிதடி போலீஸ் கேஸ்சுன்னு போய் வாழ்க்கையை இழந்திருக்க மாட்டாங்க.
அன்னைக்கு ரசிகர்கள் உங்களுக்காக சண்டை போட்டுட்டு இருந்தப்ப அமைதியா வேடிக்கை பார்த்துட்டு, இன்னைக்கு ரேஸ் கிரவுண்டுல உஸ் உஸ் உஸ்ன்னு விரலை வாய்ல வெச்சு அமைதியா இருக்க சொல்றீங்களே? நான் ரேஸ்க்கு வந்துருக்கேன், டீசன்ஸி வேணும் மெச்சூரிட்டி வேணும்ன்னு அட்வைஸ் பண்றீங்களே?
இப்போ இப்படி பாடம் எடுக்க தெரிஞ்ச உங்களுக்கு, அன்னைக்கு பாட்டு பாடி ரசிகர்களை உசுப்பேத்தி விட்ட போது இந்த டீசன்ஸி மெச்சூரிட்டி எல்லாம் எங்கே போச்சு? கலைஞர் பாராட்டு விழாவுல என்னை பாராட்டச் சொல்லி வற்புறுத்தறாங்கன்னு சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு இத்தனை நாளா கார் ரேஸ்க்கு வராத ஒரு நடிகர், இப்போ அரசியலுக்கு வந்து முதல்வராகி உங்க கார் ரேஸ்க்கு வர்றாருன்னா அதுக்கு பின்னாடி ஒரு அரசியல் கணக்கு இருக்குதுன்னு உங்களுக்கு தெரியாதா?
அவ்வளவு பச்சைப்புள்ளையா நீங்க? சினிமாவுக்கு இனி வரமாட்டேன்னு சொல்லிட்டு அரசியலுக்கு வந்த பிறகு அவரோட நீங்க நாங்க 2 பேரும் நெருங்கிய நண்பர்கள்ன்னு சொல்லிட்டு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துக்கறது எல்லாம் எவ்வளவு பெரிய சுயநலம், சந்தர்ப்பவாதம்? உங்க மேல இருந்த மரியாதையே போச்சு. நீங்க இந்த நிகழ்வை தவிர்த்திருக்கணும். பாவம் உங்க ரசிகர்கள், அவங்களை எப்படி ஏமாத்திட்டீங்க என்று ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





