- Advertisement -
Homeபொழுதுபோக்குடிஎன்ஏ படம் மூலம் கம்பேக் கொடுத்த நடிகர் அதர்வா… தமிழ் சினிமாவில் நடிகர் முரளியை போல...

டிஎன்ஏ படம் மூலம் கம்பேக் கொடுத்த நடிகர் அதர்வா… தமிழ் சினிமாவில் நடிகர் முரளியை போல முக்கிய இடத்தை பிடிப்பாரா?

- Advertisement -

எப்போதுமே சினிமா ரசிகர்கள், மலையாள படங்களை கொண்டாடுகின்றனர். அதற்கு காரணம் மலையாள பட இயக்குனர்கள் எப்போதுமே நாயகனை நம்பி படம் எடுப்பதில்லை. நாயகனை மையப்படுத்திய கதைகளை எழுதுவதும் இல்லை. கதைதான் மலையாளத்தில் எப்போதுமே ஹீரோ. யதார்த்த கதைக்களத்தில் உருவாகும் மலையாள படங்கள் அதனால்தான் ஜெயிக்கின்றன.

ஆனால் சமீபகாலமாக மலையாள படங்களிலும் கொஞ்சம் ஹீரோயிசம் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்கள் மலையாளத்தில் ரிலீஸாகி வரவேற்பை பெறுவதால், சில மலையாள இயக்குனர்கள் ஆக்சன் வன்முறை பழிவாங்கல் என தமிழ் படங்களை காப்பியடிக்க துவங்கியிருக்கின்றனர். இது ஆபத்தானது என மலையாள பட விமர்சகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

- Advertisement -

தமிழில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன படங்கள் பலவும் மலையாள படங்களை போன்ற யதார்த்தமான கதைக்களங்களில் உருவானதாக தான் இருக்கிறது. சமீபத்தில் மாஸ் ஹிட் ஆன டூரிஸ்ட் ஃபேமிலி படம் கூட மலையாள படம் போன்ற கதைக்களத்தில் உருவான படமாக இருந்தது. அங்கு கேரக்டர்களும் கதைக்களமும்தான் படத்தை பேச வைத்தது.

நடிகர் முரளி மகன் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சண்டி வீரன் பரதேசி இமைக்கா நொடிகள் 100 கணிதன் என பல படங்களில் நடித்தார். குறிப்பாக பாலாவின் பரதேசி படத்தில் ஒட்டுப்பொருக்கி கேரக்டரில் அதர்வாவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஆனால் தொடர்ந்து அவரை தமிழ் சினிமா கொண்டாடவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் அதர்வா நிமிஷா விஜயன் நடித்த டிஎன்ஏ படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனமும் அடையாளமும் பெற்றிருக்கிறது. இந்த படத்துக்கு சினிமா விமர்சகர்களும் பாசிட்டிவ் ஆன கருத்துகளை கூறி வருகின்றனர். நல்ல கதை நல்ல கேரக்டர் என டிஎன்ஏ போன்ற படங்களை அதர்வா தேர்வு செய்து நடித்தால் பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பார் என்கின்றனர்.

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் அதிக கவனம் பெற்ற நடிகராக இருந்தவர் முரளி. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். நல்ல நடிகராக பெயர் வாங்கியவர். ரசிகர்களால் மறக்க முடியாத சிறந்த கலைஞர். அவரது மகன் அதர்வா டிஎன்ஏ படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி தந்திருக்கிறார். இது அவரது வெற்றிப் பாதைக்கு முதல் படியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்