- Advertisement -
Homeபொழுதுபோக்குகாலா படத்தில் வந்த ஹரிதாதாவை மறக்க முடியுமா? 3 தேசிய விருதுகளை வென்ற பிரபல இந்தி...

காலா படத்தில் வந்த ஹரிதாதாவை மறக்க முடியுமா? 3 தேசிய விருதுகளை வென்ற பிரபல இந்தி நடிகர் நானே படேகர் மறைவு – பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல்!

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நானா படேகர். தமிழில் பொம்மலாட்டம் காலா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகர். இன்று அதிகாலை கோவாவில் அவரது இல்லத்தில் காலமானார். இந்திய திரை உலகின் சிறந்த நடிகர்களின் ஒருவர் நானா படேகர். இவரது நிஜ பெயர் விஸ்வநாத் படேகர்.

கடந்த 1978ம் ஆண்டில் வெளியான கமன் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 10 ஆண்டுகளில் பல்வேறு படங்களில் அவர் நடித்தார். எனினும் 1988ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது.

- Advertisement -

தனது 48 கால திரையுலக வாழ்வில் இந்தி மட்டுமின்றி மராட்டி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நானா படேகர் நடித்துள்ளார். பெரும்பாலும் வணிகம் சார்ந்த கமர்ஷியல் படங்களில் நடிப்பதை விட வலுவான அழுத்தமான வித்யாசமான தனித்துவமான வேடங்களில் மட்டுமே அவர் நடித்தார். எல்லா பட வாய்ப்புகளையும் ஏற்காமல் தேர்ந்தெடுத்த படங்களில் தனக்கு பிடித்தமான கேரக்டர்களில் நடித்து நடிப்பில் தனிமுத்திரை பதித்தார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பிரஹார் மற்றும் வத் என்ற 2 படங்களை நானா படேகர் டைரக்ட் செய்து இருக்கிறார். மேலும் 2 படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஒரு சில பாடல்களையும் அவர் சொந்த குரலில் பாடி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நானா படேகர், நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ஹரிதாதா என்ற வேடத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை அசத்தினார்.

- Advertisement -

எளிமையான வாழ்க்கை முறைக்கும் சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர் நானா படேகர். பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மறுசீரமைக்க அனுபூதி என்ற தொண்டு அமைப்பின் மூலம் நிதி உதவி வழங்கினார். 2015ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு விதங்களில் உதவினார். இதுவரை 3 முறை அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். மேலும் மத்திய அரசு 2013ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

நாடகத் துறையின் மீது ஈடுபாடு கொண்ட நடிகர் நானா படேகர் நீலகண்டி என்ற பெண் கலைஞரை 1978ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2 பிள்ளைகள் பிறந்த பிறகு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகளாக நானா படேகர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். 75 வயதான அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்