தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் இளவரசு. கிழக்கு சீமையிலே பாஞ்சாலங்குறிச்சி முதல் மரியாதை என பல படங்களில் ஒளிப்பதிவில் உதவியாளராக இருந்த அவர் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இப்போது குணச்சித்திர நடிப்பில் தனியிடத்தை பிடித்து இருக்கிறார்.
குறிப்பாக முத்துக்கு முத்தாக படத்தில் ஒரு பாசமிகு தந்தையாக அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் 5 மகன்களுக்கு தாயாக சரண்யா பொன்வண்ணனும் இளவரசும் வாழ்ந்திருந்தனர். இளவரசு நடித்த பல படங்களில் அவருக்கு தனி வரவேற்பை பெற்று தந்த படமாக இது இருந்தது.
சில படங்களில் சில காட்சிகளில் வந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான தாய்கிழவி படத்தில் கோல்டு குமார் கேரக்டரில் வந்து 160 பவுன் தங்க நகைகள் ராதிகாவிடம் இருப்பதாக கூறி படத்தின் கதைக்கே கருவாக இருப்பது இளவரசு நடிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் இளவரசு கூறியதாவது, எல்லோரும் சினிமாக்காரங்களை ஏதோ குடிச்சிட்டு குடியால தான் செத்ததாக பரவலா பேசுறாங்க. அது உண்மை இல்லை. நடிகர் மயில்சாமி இறந்தது குடிகாரர் என்பதால் இல்லை. கட்டுப்பாடு இல்லாத உணவு முறைதான் காரணம்.
இறந்த ஒரு மனிதனைப் பற்றி பெருமையாக பேசுவாங்க. இல்லைன்னா தப்பா பேசுவாங்க. ஆனா மயில்சாமி பத்தி நீங்க விமர்சனமா வேற எதுவும் வைக்க முடியாது. அவனைப் பத்தி நல்லதா மட்டும் தான் பேச முடியும். ஏனென்றால் தனிபட்ட முறையில் மயில்சாமி ஏகப்பட்ட உதவிகளை மக்களுக்கு செஞ்சிருக்கான். ஆனா அதை வெளியே சொன்னது இல்லை.
மும்பையில் இருந்து வந்து விவேக் ஓபராய் சென்னை மக்களுக்கு உதவி பண்றது தெரிஞ்சு மயில்சாமி நேர்ல போய் சார் நீங்க அங்கிருந்து இங்கு வந்து உதவி பண்ணினால் இதுதான் மரியாதை என்று சொல்லி அவர் போட்டுட்டு இருந்த எம்ஜிஆர் போட்டோ போட்ட டாலர் தங்க செயினை அவர் கிட்ட கொடுத்துட்டு வந்தார் என்று நடிகர் இளவரசு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





