- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசு அதிரடியாக அறிவித்த திரைப்பட விருதுகள்… 7 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக அறிவித்தது இதற்காக...

தமிழக அரசு அதிரடியாக அறிவித்த திரைப்பட விருதுகள்… 7 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக அறிவித்தது இதற்காக தானா? – வெளிப்பட்ட உண்மை!

- Advertisement -

தமிழக அரசு தமிழ் சினிமா சார்ந்த முக்கிய அறிவிப்பை நேற்றிரவு அதிரடியாக வெளியிட்டது. அதில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் வரை 7 ஆண்டுகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகைகள் சிறந்த இயக்குனர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் இந்த சிறப்பு விருதுகள் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த திடீர் விருதுகள் அறிவிப்பு மக்கள் மத்தியில் கோலிவுட் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இப்படி 7 ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.

- Advertisement -

இப்படி ஒரே நாளில் 7 ஆண்டுகளுக்காக திரைப்பட விருதுகளை தருவதன் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவே தங்களது பக்கம் இருப்பது போல் திமுக அரசு ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் 2016 முதல் 2022 வரை என்பது 2025ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு மொத்தமாக தந்திருக்கலாமே என்றும் கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த விருது பட்டியலில் சில முரண்பட்ட விஷயங்களும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் ஆர்யா சிறந்த நடிகராகவும் பசுபதி சிறந்த குணச்சித்திர நடிகராகவும் விருது பட்டியலில் உள்ளனர். ஆனால் சார்பட்டா பரம்பரை படமும் இந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித்தும் இந்த விருது பட்டியலில் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அதே போல் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளியான மிக மிக அவசரம் என்ற திரைப்படம் பெரிய அளவில் கவனம் பெற்ற ஒரு முக்கிய படமாகும். அந்த படத்தில் பொது இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர் தனது இயற்கை உபாதையால் என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திக்கிறார் என்பதை மிகவும் அழுத்தமாக சொன்ன ஒரு முக்கிய படமாகும்.

அந்த படத்துக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. திமுக ஆதரவாளர்களான இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் போஸ் வெங்கட் போன்ற சிலர் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருப்பதாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில் இப்படி சினிமா விருதுகளை வழங்கி ஒட்டுமொத்த சினிமா துறை ஓட்டுகளை திமுக அரசு பெற முயற்சிக்கிறதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்