- Advertisement -
Homeபொழுதுபோக்குபிலிம்ஃபேர் விருதுகளை அள்ளிய அமரன் படக்குழு… கேரளாவில் நடந்த விழாவில் தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்...

பிலிம்ஃபேர் விருதுகளை அள்ளிய அமரன் படக்குழு… கேரளாவில் நடந்த விழாவில் தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பலர் பங்கேற்பு!

- Advertisement -

ஒரு சிறந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் போது அது வெற்றிப்படமாக மாறுகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெறுகிறது. அதே நேரத்தில் அந்த படத்துக்கு தரப்படும் விருது என்பது மேலும் அந்த படத்துக்கு கிடைத்த ஒரு சமூக அங்கீகாரமாகவும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

கேரளாவில் 70வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன.

- Advertisement -

இதில் தமிழ் திரைப்படங்கள் பிரிவில் பல வெற்றிப் படங்கள் நிறைய விருதுகளை வென்றன. அதுபற்றிய விவரம் வருமாறு, சிறந்த திரைப்படம் – அமரன் சிறந்த இயக்குனர் – பிஎஸ் வினோத் ராஜ் (கொட்டுக்காளி) ராஜ்குமார் பெரியசாமி (அமரன்) சிறந்த திரைப்படம் (விமர்சகர்) – மெய்யழகன் (பிரேம் குமார்).

சிறந்த நடிகர் (முதன்மை பாத்திரம்) – சிவகார்த்திகேயன் (அமரன்) சிறந்த நடிகர் (விமர்சகர்) – அரவிந்த்சாமி (மெய்யழகன்) சிறந்த நடிகை (முதன்மை பாத்திரம்) – சாய் பல்லவி (அமரன்) சிறந்த நடிகை ( விமர்சகர்) அன்னா பென் (கொட்டுக்காளி) சிறந்த நடிகர் (குணச்சித்திரம்) – கார்த்தி (மெய்யழகன்) சிறந்த நடிகை (குணச்சித்திரம்) – சுவாசிகா (லப்பர் பந்து)

- Advertisement -

சிறந்த இசை ஆல்பம் – ஜீவி பிரகாஷ் குமார் (அமரன்) சிறந்த பாடலாசிரியர் – உமாதேவி (யாரோ இவன் யாரோ – மெய்யழகன்) சிறந்த பாடகர் (ஆண்) ஹரிச்சரண் (ஹே மின்னலே… அமரன்) சிறந்த பாடகர் (பெண்) – ஸ்வேதா மோகன் (ஹே மின்னலே… அமரன்) சிறந்த அறிமுக இயக்குனர் – சுரேஷ் மாரி
( ஜே பேபி) தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)

சிறந்த அறிமுக நடிகர் ரிது ஹரூன் (தக்ஸ்) சிறந்த அறிமுக நடிகை – ஸ்ரீ கௌரி பிரியா (லவ்வர்) சிறந்த ஒளிப்பதிவு – சிஹெச் சாய் (அமரன்) தலை சிறந்த நடிப்பு – விக்ரம் (தங்கலான்) என தமிழ் நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் விருதுகளை வென்றனர். இந்த விழாவில் அதிகபட்சமாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் மட்டும் 7 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்