நடிகர் கமல்ஹாசன் நடிப்பது மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடப்பட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தமிழில் அவர் இதுவரை 19 படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறார். முதன்முறையாக அவர் தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் தயாரித்த படம் ராஜபார்வை. இது கமல்ஹாசனின் 100வது படம்.
சிங்கீதம் சீனிவாசராக இயக்கிய இந்த படம் கடந்த 1981ம் ஆண்டில் வெளியானது. கமல் மாதவி நடித்த இந்த படம் தோல்வி அடைந்தது. 1986ல் கமல் தயாரிப்பில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கமல் அம்பிகா நடித்த படம் விக்ரம். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து 1987ம் ஆண்டில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கமல் தயாரித்த படத்தில் நாயகனாக சத்யராஜ் நடித்திருந்தார். சந்தான பாரதி இயக்கிய இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கமல் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.
அடுத்து 1988ம் ஆண்டில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய முதல் படம் சத்யா. கமலுடன் அமலா இணைந்து நடித்திருந்தார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1989ம் ஆண்டில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள். மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து 1992ம் ஆண்டில் பரதன் இயக்கத்தில் கமல் தயாரித்த படம் தேவர் மகன். சிவாஜியுடன் கமல் இணைந்து நடித்த மாபெரும் வெற்றிப்படம்.
1994ம் ஆண்டில் நடிகர் நாசர் ஹீரோவாக நடித்த படம் மகளிர் மட்டும். இதில் ரேவதி ஊர்வசி ரோகிணி முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அடுத்து 1995ல் வெளியான படம் குருதிப்புனல். கமல் அர்ஜூன் கமல் இணைந்து நடித்த இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. பாடல் இல்லாத படம். 2000ம் ஆண்டில் கமல் இயக்கி ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த படம் ஹே ராம் தோல்வியடைந்தது.
2003ம் ஆண்டில் கமல் தயாரிப்பில் மௌலி இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடித்த படம் நளதமயந்தி. 2004ம் ஆண்டில் கமல் இயக்கி தயாரித்த படம் விருமாண்டி. 2005ம் ஆண்டில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் தயாரித்த படம் மும்பை எக்ஸ்பிரஸ் தோல்வியடைந்தது. 2009ம் ஆண்டில் கமல் மோகன்லால் இணைந்து நடித்த படம் உன்னைப் போல் ஒருவன் வெற்றி பெற்றது. 2013ம் ஆண்டில் விஸ்வரூபம் படம் பெரிய வெற்றியை பெற்றது.
அடுத்து 2015ம் ஆண்டில் நடிகர் ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் உத்தம வில்லன் படம் தோல்வியடைந்தது. 2015ம் ஆண்டில் வெளியான தூங்காவனம் படம் பிளாப் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான விக்ரம் 2 பெரிய வெற்றியை பெற்றது. 2022ம் ஆண்டு விஸ்வரூபம் 2 பிளாப் ஆனது. 2024ல் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் பெரிய வெற்றியை பெற்றது. மொத்தம் 19 தமிழ் படங்களை சொந்தமாக தயாரித்தவர் கமல்ஹாசன். இப்போது சேயோன் மற்றும் தர்மன் ஆகிய படங்களும் கமல் தயாரிப்பில் உருவாகி வருகின்றன.





