நடிகர் விஜய் படங்கள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். இப்போதைய சூழலில் தோல்வி படங்கள் என்றால் கூட தயாரிப்பாளர்களுக்கு கணிசமான லாபம் தரும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் மட்டும்தான். ரஜினி கமல் அஜீத் நடித்த படங்கள் தோல்வி என்றால் பலத்த நஷ்டம்தான் வரும்.
இப்போது நடிகர் விஜய் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 69வது படம். இதுதான் கடைசி படம் என்று அறிவித்து விட்டார். ஜனநாயகன் படத்துக்கு பிறகு இனி விஜய் படங்கள் பார்க்க ஆசைப்பட்டால் அவர் இதுவரை நடித்த படங்களை தான் திரும்ப திரும்ப பார்க்க நேரிடும். டிவியில் அல்லது ரி ரிலீஸ் செய்யப்படும் படங்களை தியேட்டர்களில் விஜய் படங்களை பார்க்க முடியும்.
நடிகர் விஜய் நடித்த படங்களில் சில படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக பெரிய வெற்றியை பெற்றவை. அந்த வரிசையில் பூவே உனக்காக காதலுக்கு மரியாதை பிரண்ட்ஸ் சச்சின் கில்லி வசீகரா போக்கிரி பகவதி திருமலை திருப்பாச்சி சிவகாசி குஷி சர்கார் கத்தி துப்பாக்கி மெர்சல் பிகில் தெறி என பல படங்களை சொல்லலாம்.
இதில் கில்லி படம் கடந்தாண்டில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விஜய் திரிஷா நடிப்பும் அதில் இடம்பெற்ற பாடல்களும் தியேட்டர்களை திருவிழா பகுதிகளாக்கியது. இந்த படத்தில் வரும் பாடல்களுக்கு 20கே கிட்ஸ் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டனர். தியேட்டரே திருவிழா மேடையாக மாறிவிட்டது.
அதன்பிறகு சில வாரங்களுக்கு முன் ரி ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை முதன்முறையாக பார்த்த பல டீன் ஏஜ் வயது தளபதி ரசிகர்கள், இப்படி ஒரு விண்டேஜ் காதல் படத்தை இதுவரை பார்த்தது இல்லை. குறிப்பாக விஜய் செம க்யூட்டாக இருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த 2 படங்கள் அடுத்து ரி ரிலீஸ் செய்யப்பட்டு திரைக்கு வர இருக்கின்றன. இந்த தகவலை அந்த படங்களின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். அதாவது விஜய் நடித்த குஷி மற்றும் சிவகாசி ஆகிய படங்கள் ரி ரிலீஸ் ஆக உள்ளன. நடிகர் எஸ்ஜே சூர்யா இயக்கிய படம்தான் குஷி. இயக்குனர் பேரரசு இயக்கிய சிவகாசி படமும் மாஸ் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.





