- Advertisement -
Homeபொழுதுபோக்குகட்டிய மனைவி பெத்த பிள்ளைகளுடன் வாழாதவருக்கு பாசம் எங்கிருந்து வரும்? - முதல்வர் விஜயை கடுமையாக...

கட்டிய மனைவி பெத்த பிள்ளைகளுடன் வாழாதவருக்கு பாசம் எங்கிருந்து வரும்? – முதல்வர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்த முன்னாள் முதல்வர்!

- Advertisement -

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் மக்களை சந்திக்கும் கட்சி கூட்டங்களிலும் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் உங்க அண்ணன் உங்க புள்ளை உங்க தம்பி வந்திருக்கிறேன், உங்க விஜய் வந்திருக்கிறேன் என்று பாசப்பிணைப்பாக மக்களிடம் பேசி ஆதரவு கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. இது அவரது பிரசார பார்மூலமாக ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது.

சமீபத்தில் மதுராந்தகம் தொகுதியில் கட்சி தாவிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்றைய தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போதும் நான் முதல்வராக இங்கு வரவில்லை. உங்க அண்ணன் உங்க தம்பி உங்க புள்ளையாக வந்திருக்கிறேன் என்று வழக்கமான பஞ்ச் டயலாக் பேசி ஆதரவு கேட்டார்.

- Advertisement -

வழக்கமாக எம்எல்ஏ மறைந்தாலோ அல்லது அவர் பணிசெய்ய முடியாத அளவுக்கு உடல்நலம் மனநலம் பாதிப்பு ஏற்பட்டு ராஜினாமா செய்தாலோ மட்டும்தான் இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் சுய விருப்பம் லாபம் காரணமாக தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாபாமா மரகதம் குமரவேல் இருவரும் தவெக பக்கம் தாவியது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில் தவெக தலைவர் விஜய் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்த தொகுதிகளில் ஓட்டு கேட்டு வரும் தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடித்து வருகின்றனர். மேலும் ஆதரவு கேட்டு வரும் தவெக நிர்வாகிகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்கும் நிலையில் தவெக வெற்றி என்பது பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

- Advertisement -

ஆனால் விஜய் இன்னும் தனக்கு பழைய செல்வாக்கு இருப்பது போலவே வழக்கமான டயலாக் பேசி மக்களை கவர நினைக்கிறார். ஆனால் அவர் மீது கடுமையான அதிருப்தி நிலவ காரணம், அவரது செயல்பாடுகள் மட்டுமின்றி தவெக அமைச்சர்களாக உள்ள சிலரது பேச்சும் மோசமான நடவடிக்கைகளும் மக்களை கடுப்படைய செய்துள்ளது.

இன்று இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, உங்க வீட்டு அண்ணனாக இருப்பேன் மாமனாக இருப்பேன் என்று பச்சை பொய் பேசுகிறார் விஜய். பாசம் என்று சொன்னால் தாய் தந்தையோடு வாழ வேண்டும். கட்டிய மனைவியோடு வாழ வேண்டும். பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும். பாசம் அங்கே தான் பிறக்கும். வீரவசனம் பேசினால் போதாது. நிஜத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்