- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படம் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன் பட நடிகை -...

விஜய் படம் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன் பட நடிகை – அதுதான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் உள்ள தலைநகர் கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. சுமார் 85 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதிகொண்ட அரங்கத்தில் இந்த விழா நடக்கிறது.

இதில் நடிகர் விஜய் இயக்குனர் எச் வினோத் கதாநாயகி பூஜா ஹெக்கே மற்றும் நடிகை மமிதா பைஜூ இசையமைப்பாளர் அனிருத் உள்பட படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் படக்குழுவினர் என 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவு சில மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டு விட்டது.

- Advertisement -

இது விஜயின் கடைசி படம் என்பதால் தரமான சம்பவமாக இருக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் தவெக கட்சியினரும் இந்த படத்தின் அமோக வெற்றியை எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் இந்த படம் பெரிய வெற்றி பெற்றால்தான் அது அரசியலிலும் அவரை புகழ வசதியாக இருக்கும். ஒருவேளை படம் சொதப்பி விட்டால் அதை வைத்தே விஜயை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வார்கள்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வரும் பொங்கலுக்கு ஜனவரி 14ம் தேதி வெளிவர உள்ளது. பராசக்தி படத்தில் நாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் பராசக்தி படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார். அப்போது ஸ்ரீலீலா கூறியதாவது, பராசக்தி வருகிற ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது.

- Advertisement -

இது என்னுடைய முதல் தமிழ் படம். நான் ரொம்பவும் உற்சாகமாக இருக்கிறேன் இந்த படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்று கூறினார். அப்போது, விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் நீங்கள் தெலுங்கில் நடித்த பகவந்த் கேசரி படத்தோட ரீமேக் என்கிறார்களே? அது உண்மையா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் சொன்ன நடிகை ஸ்ரீலீலா, அதுபற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் நானும் விஜய் சாரோட ஃபேன்தான் என்று கூறி நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பி இருக்கிறார். பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் படம் என்ற நிலையில், நடிகர் பாலய்யா நடித்த கேரக்டரில் விஜய் நடித்திருக்கிறார். இதுதான் ஊர் அறிந்த ரகசியம் ஆச்சே, அதை ஏன் நடிகை ஸ்ரீலீலா சொல்லாமல் மழுப்புகிறார் என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்