- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ. 38.50 லட்சம் பணம் பறிக்க நடத்த நூதன...

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ. 38.50 லட்சம் பணம் பறிக்க நடத்த நூதன மோசடி – போலீசில் புகார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். மேலும் ராஜ்ய சபா எம்பியாகவும் பதவி வகித்து வருகிறார். நடிகர் இயக்குனர் கதை ஆசிரியர் கவிஞர் பாடகர் தொழில்நுட்பக் கலைஞர் தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவரது படங்களை தயாரிப்பது மட்டுமின்றி மற்ற ஹீரோக்களையும் படங்களையும் சொந்தமாக தயாரிக்கிறார். அந்த வகையில் இப்போது ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் உள்ளிட்ட படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

- Advertisement -

இந்த நிறுவனத்தின் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக முரளி கிருஷ்ணா என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 2ம் தேதி இந்த நிறுவனத்தின் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டுள்ளது. முரளி கிருஷ்ணாவின் வாட்ஸ் அப்புக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் ராஜ்கமல் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாளரின் வாட்ஸ் அப் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள் அவரது புகைப்படத்தை தங்களது தொடர்புடைய எண்ணுக்கு வைத்துள்ளனர்.

அந்த தயாரிப்பாளர் பேசுவது போன்று பேசி உடனடியாக அவசர தேவைக்காக 38.50 லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கும்படியும் குறிப்பிட்ட வங்கி கணக்கு விபரங்களையும் அதில் அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளரின் வாட்ஸ் அப் டிபி என்றாலும் வேறு எண்ணில் இருந்து மெசேஜ் வந்ததால் சந்தேகம் அடைந்த முரளி கிருஷ்ணா, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கே பேசியிருக்கிறார். அதன் பிறகு இது பாஸ் ஸ்கேம் என்னும் பணம் பறிக்கும் மோசடி கும்பலின் வேலை என தெரியவந்தது.

- Advertisement -

இதையடுத்து தங்களுக்கு வந்த மெசேஜ் கால்கள் உள்ளிட்டவைகளை ஆதாரமாக காண்பித்து சென்னை சைபர் க்ரைம் போலீசில் கமல் நிறுவனம் சார்பில் முரளி கிருஷ்ணா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சம்பந்தப்பட்டவரின் உயர் அதிகாரி போட்டோவை வாட்ஸ் அப்பில் டிபி ஆக வைத்து பணம் கேட்டு மெசேஜ் அனுப்புவார்கள்.

அதன் உண்மை தன்மையை ஆராயாமல் அவசரப்பட்டு பணத்தை அனுப்பக்கூடாது. இதுபோன்று நிறைய மோசடிகள் நடந்துள்ளன. பொதுமக்கள் தான் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அதுவும் கமல்ஹாசன் போன்ற பிரபலமான நடிகர்கள் நட்சத்திர விளையாட்டு வீரர்கள் பிரபலமான தொழிலதிபர்கள் பெயரில் இது போன்ற பாஸ் ஸ்கேம் மோசடிகள் இதுவரை நிறைய நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்