- Advertisement -
Homeபொழுதுபோக்குரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும்தான் போட்டி - விரைவில் நடிகர் தனுஷூம் இந்த டயலாக்கை மேடையில்...

ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும்தான் போட்டி – விரைவில் நடிகர் தனுஷூம் இந்த டயலாக்கை மேடையில் பேசுவாரோ? கொடியை பார்த்து அசந்து போன தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் தமிழக அரசியல் களத்துக்கு படையெடுத்து வந்த நடிகர்கள் கூட்டம் மிகப்பெரியது. ஆனால் அதில் வெற்றிக்கொடி நாட்டியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த் அடுத்து தளபதி விஜய் மட்டும் தான். எம்ஜிஆரின் ஆதரவில் வந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் தமிழகத்தை ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நடிகர்கள் சிவாஜி கணேசன் கே பாக்யராஜ் டி ராஜேந்தர் கமல்ஹாசன் சரத்குமார் நவரச நாயகன் கார்த்திக் மன்சூர் அலிகான் கருணாஸ் என பலரும் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதித்து ஏமாந்து போனதுதான் மிச்சம். சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்த சரத்குமார் இப்போது பாஜகவில் ஐக்கியமாகி விட்டார்.

- Advertisement -

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது நடிகர் விஜய் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக சந்தித்த சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வென்றது விஜய் ஒருவர் மட்டும்தான். அதுவும் நடிகர் விஜய் என்கிற அவரது தனிமனித செல்வாக்கு மட்டுமே அவருக்கு 1.70 கோடி ஓட்டுகளை பெற்றுத் தந்தது.

55 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அதிமுக 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட திமுக என ஜாம்பவான் கட்சிகள் பல கோடி ரூபாய்களை செலவு செய்து மக்களுக்கு பல ஆயிரம் ரூபாய் கொடுத்தும் அவர்களால் மக்களின் ஆதரவை பெற முடியவில்லை என்பது இதில் கவனிக்கத்தக்கது. நடிகர் விஜய் முதல்வரான பிறகு தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளுக்கு அடுத்த முதல்வர் நான்தான் என்கிற கனவு வந்துவிட்டது. இதனால் பலரும் அரசியல் கட்சிகளில் சேரவும் புதிதாக அரசியல் கட்சி துவங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இப்போது நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற கொடி சமீபத்தில் அறிமுகமாகி உள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொடி என்றாலும் இப்போதுதான் அது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் பலரும் இப்போது தங்களது வாகனங்களில் இந்த கொடியை கட்ட துவங்கிவிட்டனர். எண்ணம் போல் வாழ்க்கை என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் தனுஷ் உருவம் பொறித்த இந்த கொடிக்கு பெரிய அளவில் இணையத்தில் கவனமும் கிடைத்து வருகிறது.

எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் நிச்சயமாக அரசியல் களத்தில் குதிப்பார் என்றும் ஒரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதனால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ரெண்டே ரெண்டு கட்சிக்கு மட்டும் தான் போட்டி என்று அரசியல்வாதி தனுஷ் அந்த பிரபலமான டயலாக்கை மேடையில் பேசுவார் என்று மக்கள் மத்தியில் பேசவும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

சற்று முன்