- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 அளவுக்கு மெகா மாஸ் ஹிட் படமாக கேம் சேஞ்சர் ஜெயிக்குமா, வசூலில் சாதிக்குமா...

புஷ்பா 2 அளவுக்கு மெகா மாஸ் ஹிட் படமாக கேம் சேஞ்சர் ஜெயிக்குமா, வசூலில் சாதிக்குமா – பிரமோஷனில் குடும்பமே இறங்கிடுச்சே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். ஆனால் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதனால் ராம்சரண் நடிப்பில் தில்ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள கேம் சேஞ்சர் படம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி தமிழகத்தில் இந்த படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் அதே நாளில்தான் கேம் சேஞ்சர் வெளியாகிறது. சில தினங்களுக்கு முன் விஜயவாடாவில் 250 அடி உயரத்தில் ராம் சரணுக்கு கட் அவுட் வைத்து, ஹெலிகாப்டரில் பூத்தூவி கேம் சேஞ்சர் படத்துக்கு பிரமோசன் செய்யப்பட்டது.

- Advertisement -

இதையடுத்து நாளை விஜயவாடாவில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீடு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராம் சரணின் அப்பா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள இருக்கிறார். இதில் ஷங்கர், ராம்சரண், தில் ராஜூ உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

அதன்பிறகு வருகிற 4ம் தேதி விசாகப்பட்டணத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடக்க உள்ளது. இதில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கிறார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, ராம் சரணின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி, சித்தப்பா பவன் கல்யாண் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கேம் சேஞ்சர் படம் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முக்கிய காரணம், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் அமோக வெற்றியும் வசூலும்தான் காரணம் என்கின்றனர்.

ஏனென்றால் நடிகர்கள் அல்லு அர்ஜூன் ராம் சரண் குடும்பங்கள் எல்லாம் நெருக்கமாகனவர்களாக இருந்தாலும், சினிமா போட்டியில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் 1760 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. அதனால் கேம் சேஞ்சர் படமும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிய வேண்டும். கடைசிக்கு ரூ. 1000 கோடி இலக்கையாவது கடக்க வேண்டும் என அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்