- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவுக்கு அது மட்டும்தான் முக்கியம், ஒரு கோரிக்கை அவரிடம் வைத்திருக்கிறேன் - இசையமைப்பாளர் கங்கை அமரன்...

இளையராஜாவுக்கு அது மட்டும்தான் முக்கியம், ஒரு கோரிக்கை அவரிடம் வைத்திருக்கிறேன் – இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆதங்கம்!

- Advertisement -

இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜாவின் சொந்த தம்பி கங்கை அமரன். அவரும் பல படங்களை இயக்கியவர். ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர். பாடல்களை சொந்தமாக எழுதி அவரே பாடியும் இருக்கிறார். பல சூப்பர் ஹிட் படங்களை பாடல்களை தந்தவர் கங்கை அமரன். குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனர் கங்கை அமரன்தான்.

சமீபத்தில் சென்னையில் பருந்து என்ற படத்தின் விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அந்த விழாவில் கங்கை அமரன் பேசியதாவது, பருந்து படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் அழகுமலை நான் இயக்கிய படங்களில் படப்பிடிப்பை சின்ன வயதில் பார்த்து இருக்கிறார்.

- Advertisement -

மதுரை சுற்றுவட்டாரத்தில் நான் அதிகமாக படப்பிடிப்பு நடத்துவேன். நாம் வளர்ந்த பழகிய ஏரியாவில் படப்பிடிப்பு நடத்துவது மனசுக்கு நெருக்கமாக இருக்கும். மதுரை அழகர் கோவில் தேனியில் நான் சுற்றாத இடமே இல்லை. எட்டாம் வகுப்பு வரை தான் படித்தேன். பின்னர் அண்ணன் இசைக்குழுவில் இணைந்து பெண் குரலில் பாட ஆரம்பித்தேன். அந்த காலத்தில் ஹிட்டான பாடல்களை கம்யூனிஸ்ட் கட்சி பாடலாக மாற்றி பாடுவோம்.

பின்னர் அண்ணன் இசையமைப்பாளர் ஆனவுடன் அவருடன் பயணித்தேன். அவர் கூடவே பல ஆண்டுகள் இருந்தேன். யூடியூப்பில் இளையராஜா பாடல்களை தேடுகிறார்கள். நானும் நிறைய ஹிட் பாடல் கொடுத்திருக்கிறேன். நிறைய பாடல்களை எழுதி இருக்கிறேன். அதையும் தேட வேண்டும். நான் சினிமாக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால் எனக்கு பின்னால் வந்த கே பாக்யராஜ் 50வது ஆண்டை கொண்டாடிவிட்டார். அது எப்படி என தெரியவில்லை.

- Advertisement -

இப்போது அண்ணன் இளையராஜா வேறு மாதிரி இருக்கிறார். அவருடன் பேச முடிவதில்லை. அவரை பார்க்கச் சென்றால் பார்வையால் பேசிவிட்டு கிளம்பு என்கிறார். அவருடன் அண்ணன் தம்பியாக நேரத்தை செலவிட ஆசைப்படுகிறேன். இப்போது இரண்டாவது சிம்பொனியை அவர் முடித்து விட்டார். அதை நிறைவேற்றும் போது நான் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இன்னமும் அவர் இசையில் தான் இருக்கிறார். இசை தவிர வேறு சிந்தனை அவருக்கு இல்லை. லெனின் பாண்டியன் படத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க வேண்டும். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நான் நடிக்கிறேன். காலத்தை நாம் வெல்ல முடியாது. அந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக ரோஜா நடிக்கிறார். அவருடன் படப்பிடிப்பில் கலாட்டா செய்து கொண்டே இருப்பேன் என்று இயக்குனர் கங்கை அமரன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்