- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூரியா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு கங்குவா தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் விசுவல் ட்ரீட்

நடிகர் சூரியா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு கங்குவா தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் விசுவல் ட்ரீட்

- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. சூர்யாவின் 42வது படமான இது, 10 மொழிகளில் உருவாக்கப்படுகிறது. அதே சமயம் சூர்யாவும் இதில் கிட்டதட்ட ஐந்து கெட்டப்பில் நடிக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் திஷா பதானி நடிக்கிறார். அதோடு ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா போன்ற நகைச்சுவை நடிகர்கள் பலர் இதில் இடம் பெற்றுள்ளதால் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்தப் படத்தில் வரலாற்று காட்சிகள் இடம் பெற உள்ளதால் அந்த காட்சிகள் தற்பொழுது வனப்பகுதியில் காட்சியாகப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி பல்வேறு தகவல்கள் இந்த படத்தை பற்றி கசிந்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டுவீட்டை பதிவு செய்துள்ளது.

ஜூலை 23 அன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் வகையில் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

- Advertisement -

தயாரிப்பு நிறுவனம் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு குறித்து பதிவு செய்து டுவீட்டில் ஒரு போஸ்டர் இடம் பெற்றுள்ளது. அந்தக் போஸ்டரில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அநேகமாக அது சூரியாவாகத்தான் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

அதில் ஒரு போர்வாளை கையில் ஏந்தி, கை முழுக்க பச்சை குத்தி கொண்டு, ஒரு போர் வீரனை போல் காட்சியளிக்கிறார் சூர்யா. இந்த காட்சியை பார்க்கும் போதே இது மிகப்பெரிய ஒரு வரலாற்று பின்னணியை கொண்டு உருவாகி வரும் படம் என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்