- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் குட் பேட் அக்லி இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா......

2 வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் குட் பேட் அக்லி இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா… காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டும் ஏகே ரசிகர்கள்

- Advertisement -

அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இதனை இயக்கியிருந்தார். தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானது.

இப்படி ஒவ்வொரு விஷயங்களும் தூளாக அமைய குட் பேட் அக்லி எதிர்பார்த்ததைப் போலவே அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஒரு தீவிர அஜித் ரசிகர் படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை, குட் பேட் அக்லியில் காட்டி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். ஒவ்வொரு காட்சியும் மாஸாக அவர் அமைத்திருந்தார்.

அதேசமயம் படத்தைப் பார்த்த சிலர் அதில் ஒரு கதையும் இல்லை, முழுக்க முழுக்க அஜித்தை பில்டப் செய்தே காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்கள். படத்தில் ரெட்ரோ பாடல்கள் நிறைய இருப்பதாகவும், ஒரு மேஸ்ஸப் போன்று தான் இந்த திரைப்படத்தை ஆதிக் எடுத்திருப்பதாகவும் அவர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க படம் நன்றாக இருப்பது தொடர்பான விமர்சனங்களே அதிகம் வர ஆரம்பித்தன. ஒரு பக்கா கமர்சியல் திரைப்படமாக இது இருப்பதாகவும், மசாலா திரைப்படத்திற்கு எதற்கு கதை வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினர். அதேபோல, அஜித் வரும் காட்சிகளை எல்லாம் அவரது ரசிகர்களை கடந்து பலரும் கொண்டாடினர்.

ரெட்ரோ பாடல்களும் சரியான இடத்தில் அமைக்கப்பட்டு இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சுல்தானா பாடல், இணையத்திலும் ஒலிக்க ஆரம்பித்தது. இப்படி அஜித் ரசிகர்களை குட் பேட் அக்லி பெரிதும் கவர்ந்தது. படம் ரிலீஸ் ஆகி இரண்டாவது வார இறுதியிலும், மக்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துக் கொண்டு இருந்தனர்.

இப்படியான சூழலில், குட் பேட் அக்லி திரைப்படம் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 172 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக பார்க்கையில் இதன் வசூல் 300 கோடியை தாண்டி இருப்பதாக சொல்கிறார்கள். இந்தத் தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சற்று முன்