- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நிச்சயம் கலந்துக்க மாட்டேன், நான் வந்தால் கமல் சங்கடப்படுவார்...

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நிச்சயம் கலந்துக்க மாட்டேன், நான் வந்தால் கமல் சங்கடப்படுவார் – இயக்குனர் ஷங்கரிடம் ஓப்பனாக பேசிய ரஜினிகாந்த்

- Advertisement -

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் இரண்டு சிகரங்களாக சம உயரத்தில் நிற்கின்றனர். கடந்த 45 ஆண்டுகளாக வெற்றி நாயகர்களாக தமிழ் சினிமாவில் பவனி வரும் உச்ச நட்சத்திரங்களாக அவர்கள், தொடர்ந்து இப்போதும் ஹீரோக்களாக நடித்து அசத்தி வருகின்றனர். ரூ. 150 கோடி, ரூ. 200 கோடி என சம்பளம் வாங்கும் நிலையில் வேற லெவலில் உள்ளனர்.

எம்ஜிஆர் சிவாஜி போல, ரஜினி கமல் போட்டி இன்றும் தமிழ் சினிமாவில் நீடிக்கிறது. அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், தொழில் போட்டி இருவருக்கும் இன்னும் குறையவில்லை. ரஜினி படத்தை வசூலில் தோற்கடிக்க வேண்டும் என கமல் படமும், கமல் படத்தை வசூலில் தோற்கடிக்க வேண்டும் என்று ரஜினி படமும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ம் தேதி மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இந்த விழாவை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்சன்ஸ் மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் லால் சலாம் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், இப்போது நடித்துள்ள வேட்டையன் படமும் லைகா தயாரிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் ஷங்கருடன், ரஜினிகாந்த் நெருங்கிய நட்பில் இருக்கிறார். சிவாஜி, எந்திரன், எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இதை எல்லாம் கடந்து இந்தியன் 2 படத்தின் நாயகன் கமல்ஹாசனுடன், ரஜினிகாந்த் மிக நெருக்கமான நட்பில் இருப்பவர். கமல் சொன்னால் கண்டிப்பாக ரஜினிகாந்த் எதையுமே மறுக்க மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க லைகா புரடக்சன்ஸ், இயக்குனர் ஷங்கர் அழைத்தும் நிச்சயமாக வரமாட்டேன் என மறுப்பு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். பொன்னியின் செல்வன் விழாவில் நானும் கமலும் கலந்துக்கொண்டோம். அது மணிரத்னம் படம். கமலோ, நானோ நடிக்கவில்லை. அங்கு இருந்தது பொதுவான ரசிகர்கள்தான்.

ஆனால் இந்தியன் 2 கமல் படம். அதனால் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கமல் ரசிகர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள். நானும் கமலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்களிடம் அந்த போக்கு இல்லை. இன்னும் பாகுபாடு இருக்கிறது. அதனால் என்னைப் பற்றிய யாரேனும் தவறாக கமெண்ட் அடித்துவிட்டால், கமல் மிகவும் சங்கடப்படுவார். அதனால் அந்த விழாவில் நான் பங்கேற்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

சற்று முன்