- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடித்ததால் பயங்கர மன உளைச்சலில் தவித்தேன், தி கோட் பட நாயகி மீனாட்சி...

அந்த படத்தில் நடித்ததால் பயங்கர மன உளைச்சலில் தவித்தேன், தி கோட் பட நாயகி மீனாட்சி சௌத்ரி ஓபன் ஸ்டேட்மென்ட் – இப்படி சொல்லிட்டாங்களே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். சுருக்கமான தி கோட் என அழைக்கப்பட்ட இந்த படத்தை வெங்கட்பிரபு டைரக்ட் செய்திருந்தார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இதில் விஜயின் சம்பளமே ரூ. 200 கோடி என சொல்லப்பட்டது.

ஆனால் அதற்கேற்ப படம் முழுவதும் எல்லா காட்சிகளிலும் விஜய்தான் அதிகமாக காணப்பட்டார். அப்பா மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருந்தார். அப்பாவுக்கு ஜோடியாக சினேகா, மகனுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தனர். மீனாட்சி செளத்ரி இதற்கு முன், ஆர்ஜே பாலாஜியுடன் சொர்க்க வாசல் படத்திலும், தெலுங்கில் குண்டூர்காரம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

தி கோட் படத்தில் மீனாட்சி சௌத்ரி, கூட்டத்தில் ஒருவராக தான் பெரும்பாலும் காணப்பட்டார். நண்பர் பிரசாந்தின் மகளான அவரை, மகன் கேரக்டர் விஜய் கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சியில் மட்டுமே திரையில் சில நிமிடங்கள் தனியாக தெரிவார். மற்றபடி அந்த படத்தில் மீனாட்சி சௌத்ரியும் நடித்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டி இருந்தது.

விஜய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தும் மீனாட்சி சௌத்ரிக்கு என, இயக்குனர் வெங்கட்பிரபு முக்கியத்துவம் தராமல் ஊறுகாய் போல படத்தில் பயன்படுத்தி விட்டார் என்று பலரும் விமர்சித்தனர். இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என்றும் கமெண்ட் செய்தனர்.

- Advertisement -

இதுகுறித்து மீனாட்சி சௌத்ரி கூறுகையில், தி கோட் படத்தில் நடித்தது என ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அந்த படம் வெளியான பிறகு, நான் நடித்த கேரக்டர் குறித்து அதிகமான எதிர்மறை விமர்சனங்கள்தான் வந்தன. இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் தவித்தேன்.

ஆனால் அதற்கு பின் வெளியான லக்கி பாஸ்கர் படம் பார்த்த ரசிகர்கள், என் நடிப்பை வெகுவாக பாராட்டினர். லக்கி பாஸ்கர் படம்தான், தி கோட் படம் ஏற்படுத்திய மன உளைச்சலில் இருந்து மீண்டு வர உதவியது, என்று அந்த நேர்காணலில் மீனாட்சி சௌத்ரி கூறியிருக்கிறார். இவர் தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷூக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்