- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படம் அதிகாலை காட்சிகள் ரத்தா? தியேட்டர்கள் தரப்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு...

குட் பேட் அக்லி படம் அதிகாலை காட்சிகள் ரத்தா? தியேட்டர்கள் தரப்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு – ஏமாற்றத்தில் அஜீத்குமார் ரசிகர்கள்!

- Advertisement -

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் குட் பேட் அக்லி. இந்த படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். திரிஷா சுனில் பிரபு பிரசன்னா அர்ஜூன்தாஸ் சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

குட்பேட் அக்லி படத்தில் இருந்து முதலில் டீசர் வெளியானது. 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அடுத்து பர்ஸ்ட் சிங்கிள் செகன்ட் சிங்கிள் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வைரலானது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழ்நாட்டில் புதிய படங்கள் ரிலீஸாகும் போது அதிகாலை 4 மணி 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை. காலை 9 மணிக்குதான் சிறப்பு காட்சியுடன் படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்குகிறது. அந்த முதல் நாளில் மட்டும் 5 காட்சிகளை திரையிட அரசு தரப்பில் அனுமதி கிடைக்கிறது. அந்த வகையில் குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி காலை 9 மணிக்கு ரிலீஸாகிறது.

வழக்கமாக இதுபோல் புதிய படங்கள் ரிலீஸ் செய்ய காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் மகாவீர் ஜெயந்தி தினமான வருகிற 10ம் தேதி அரசு விடுமுறை தினமாகும். இப்படி அரசு விடுமுறை தினத்தில் ஒரு புதிய படம் ரிலீஸானால், அந்த நாளில் சிறப்பு காட்சி திரையிட ஏற்கனவே அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் எந்தவித சிக்கலும் இன்றி வரும் 10ம் தேதி காலை 9 மணிக்கு குட் பேட் அக்லி படம் ரிலீஸாகிறது.

- Advertisement -

ஆனால் பக்கத்து மாநிலங்களான கேரளா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணிக்கு புதிய படங்கள் சிறப்பு காட்சிகளுடன் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அதனால் அங்கு 9 மணிக்கு முன்பே படம் பார்த்து விடும் ரசிகர்கள் அந்த படம் குறித்து நெகட்டிவ் அல்லது பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். இது சில நேரங்களில் தமிழ்நாட்டில் பலத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதிலும் குறிப்பாக புதிய படங்களை ரிலீஸ் செய்யும் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதனால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் குட் பேட் அக்லி ரிலீஸ் என்பதால் கர்நாடகாவில் 8.30 மணிக்கும், கேரளாவில் 9 மணிக்கும்தான் இந்த படம் சிறப்பு காட்சியுடன் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளை கர்நாடகா, கேரளா தியேட்டர் உரிமையாளர்கள் ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்