- Advertisement -
Homeபொழுதுபோக்கு5 நாட்களில் அதிரி புதிரியாக பட்டைய கிளப்பும் குட் பேட் அக்லி படத்தின் வசூல், டபுள்...

5 நாட்களில் அதிரி புதிரியாக பட்டைய கிளப்பும் குட் பேட் அக்லி படத்தின் வசூல், டபுள் செஞ்சுரி அடிக்கிற நாள் இன்றுதானா? – ஏகே ரசிகர்கள் குஷி!

- Advertisement -

கடந்த 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸானது. மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை தினத்தில் வெளியானதால் முதல் நாளில் சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது. மேலும் தமிழ்நாடு கர்நாடகா கேரளா என 3 மாநிலங்களிலும் அதிகாலை 9 மணிக்கு காட்சி என ஒரே நேரத்தில் படம் ரிலீஸானது.

குட் பேட் அக்லி படத்தை பொருத்த வரை இது ரசிகர்கள் கொண்டாடும் ஒரு திருவிழா என்பதை முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்களே தெளிவாக விமர்சனம் செய்துவிட்டனர். அஜீத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மட்டுமே அஜீத்குமார் புகழ்பாடும் ஒரு படமாக இது வெளியாகி உள்ளது என்பதை தெளிவுபடுத்தி விட்டனர்.

- Advertisement -

கதை திரைக்கதை என்ற எந்த லாஜிக்கும் இல்லாமல் அஜீத்குமாரை மட்டுமே ரசிக்க விரும்பும் அவரது ரசிகர்களுக்கு இதை விட ஒரு பேன் பாய் படத்தை எந்த ரசிகரும் கொடுத்துவிட முடியாது என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை பலரும் பாராட்டி தள்ளி விட்டனர். படம் முழுக்க வாலி தீனா வரலாறு அமர்க்களம் பில்லா படங்களின் ரெபரென்ஸ் வைத்து படத்தை வேற லெவல் சம்பவமாக செய்துவிட்டார் எனவும் இயக்குனரை புகழ்ந்து தள்ளினர்.

விடாமுயற்சி படத்தில் பாலைவனம் போன்ற ஒரு பகுதியில் மனைவியை தொலைத்துவிட்டு தேடும் கேரக்டரில் நடிகர் அஜீத்குமார் மிக சிறப்பாகவே நடித்திருந்தார். பல காட்சிகளில் வில்லன்களிடம் மிக மோசமாக அடி வாங்கினார். அதைப் பார்த்த ரசிகர்களால் அதை கதையாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- Advertisement -

மேலும் அஜீத்குமாரைப் போன்ற ஒரு மாஸ் நடிகரை, அவரது மனைவி திரிஷா, படத்தின் கதைப்படி வேண்டாம் என்று சொல்லி, வேறு ஒரு நபர் மீது காதல் கொண்டு செல்வது போன்ற திரைக்கதையும் ரசிகர்களை வெறுப்படைய செய்துவிட்டது. ஆனால் பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவலாக இந்த படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

எனினும் விடாமுயற்சி தந்த தோல்விக்கு பதிலடியாக குட் பேட் அக்லி வசூலில் தொடர்ந்து பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளில் 30.9 கோடி, 2ம் நாளில் ரூ. 90 கோடி 3ம் நாளில் ரூ. 120 கோடி, 4ம் நாளில் ரூ. 150 கோடி என்ற நிலையில் இப்போது 5ம் நாளில் ரூ. 180 கோடியை வசூலில் கடந்துள்ளது. 6ம் நாளான இன்று ரூ. 200 கோடி என்ற வசூலை கடந்து குட் பேட் அக்லி டபுள் செஞ்சுரி அடித்துவிடும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்