- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வந்தாச்சு...

குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வந்தாச்சு – முந்தைய படங்களின் சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்தாரா ஏகே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் 2023ம் ஆண்டில் வெளியான படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுத்த இந்த படத்தை ஏகே ரசிகர்களே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்ததாக அஜீத்குமார் திரிஷா நடிப்பில் உருவான ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்‌ஷன் செய்த குட் பேட் அக்லி படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாவது. முதல் நாள் முதல் காட்சியிலேயே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும் உற்சாகமும் கிடைத்துள்ளது. அஜீத்குமார் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமான இந்த படம் அவர்களுக்கு பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.

ஆனால் படம் முழுவதும் ரெபரென்ஸ் ரெபரென்ஸ் என்ற பெயரில் பழைய பாடல்களை ஒலிக்க வைத்திருப்பதும், ஹீரோயிசம் என்ற பெயரில் படம் முழுவதும் அஜீத்குமாரின் புகழ் பாடுவதும் அஜீத்குமாரின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், அஜீத்குமார் ரசிகர்களுக்கும் பெரிய சந்தோஷம் தரும் என்றால், படம் பார்க்கும் மற்ற பொதுவான ரசிகர்களுக்கு இது கடும் விரக்தியை ஏற்படுத்தும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

- Advertisement -

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரூ. 30 கோடிக்கு மேல் இந்த படத்தின் முதல் நாள் வசூல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அஜீத்குமார் நடித்த வலிமை படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை குட்பேட் அக்லி படம் முறியடிக்கவில்லை என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூலித்தது. அதே போல் அவர் நடித்த துணிவு படமும் முதல் நாளில் 24.4 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் குட் பேட் அக்லி படம் முதல் நாளில் ரூ. 30 கோடி வசூலை எட்டியுள்ளது. ஆனால் எச் வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான துணிவு படம் முதல் நாளில் ரூ. 31 கோடி வசூலித்தது. அந்த சாதனையை குட் பேட் அக்லி படம் முறியடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்