- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோவின் சாதனையை ஒரு ஓரமாக வைத்த அஜித்தின் குட் பேட் அக்லி... காத்திருந்து சம்பவம் செய்த...

லியோவின் சாதனையை ஒரு ஓரமாக வைத்த அஜித்தின் குட் பேட் அக்லி… காத்திருந்து சம்பவம் செய்த ஏகே ரசிகர்கள்…

- Advertisement -

அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்னி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இன்னும் படம் வெளியாக இரண்டு நாட்களே இருப்பதால், முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மிக முக்கியமான திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. காலை 9 மணிக்கு காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சியை தொடர்ந்து இதிலும் அஜித்தின் மனைவியாக நடித்திருக்கிறார் திரிஷா. அவருக்கு ரம்யா எனும் கதாபாத்திரத்தை அளித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித் திரிஷா ஜோடிக்கு மகனாக கார்த்திகேயா தேவ் என்பவர் வருகிறார்.

இவர் ஏற்கனவே தெலுங்கில் பிரபாஸ் நடித்திருந்த, சலார் திரைப்படத்தில் வந்திருந்தார். இது வெறும் ஆக்சன் திரைப்படமாக மட்டுமல்லாமல் தந்தைக்கு மகனுக்கும் இடையேயான பாசத்தையும் காட்டி இருக்கும் என்று ஏற்கனவே ஆதிக் கூறி இருந்தார்.

படத்தில் வில்லனாக வருகிறார் அர்ஜுன் தாஸ். டாக்டர் திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வந்திருந்த இரட்டை சகோதரர்களில் ஒருவரும் இந்த திரைப்படத்தில் வில்லனாக வருகிறார். இதுபோக பிரசன்னா, தெலுங்கு நடிகர் சுனில், பிரபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஒத்த ரூபாய் தாரன் எனும் ரெட்ரோ பாடலுடன் அந்த ட்ரெய்லர் அறிமுகம் ஆகி இருந்தது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலேயே இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருப்பது ட்ரெய்லரிலும் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

சொல்லப்போனால் அஜித்தின் பழைய திரைப்படங்களின் ரெஃபரன்ஸ்கள் அதில் ஏராளமாக இருந்தன. ஒரு mash up போன்றே ட்ரெய்லர் இருப்பதாக பலரும் கூறி வந்தார்கள். இருப்பினும் அது ஏகே ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது. ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் மூன்று கோடியே 20 லட்சம் பார்வையாளர்களை அது பெற்றிருக்கிறது. இதற்கு முன்பாக லியோ திரைப்படம், மூன்று கோடியே 14 லட்சம் பார்வைகளை பெற்று சாதனை படைத்திருந்தது. இரண்டு ஆண்டுகளாக லியோவின் சாதனையை எந்த திரைப்படமும் முறியடிக்காத சூழலில் தற்போது அதனை குட் பேட் அக்லி தாண்டி இருக்கிறது.

சற்று முன்