இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடித்த படம் விடாமுயற்சி. துணிவு படத்துக்கு பின் 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஆனால் இயக்குனர் மகிழ் திருமேனி பலத்த ஏமாற்றத்தை தந்து விட்டார்.
எனினும் விடாமுயற்சி படம் பார்த்து விரக்தியடைந்த ஏகே ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையே உற்சாகப்படுத்தும் ஒரு சிறந்த படைப்பாக குட் பேட் அக்லி படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் குட் பேட் அக்லி படம் வேற லெவல் என்று பாராட்டி உள்ளனர்.
ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதே போல் பர்ஸ்ட் சிங்கிள் ஓஜி சம்பவம் பாடலும் அடுத்து செகன்ட் சிங்கிள் காட் பிளஸ் யூ மாமே பாடலும் ஏகே ரசிகர்கள் மத்தியில் பெரிய சம்பவத்தை செய்திருக்கின்றன.
நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தில் தனது அபிமான ஹீரோவை வைத்து படம் காட்டியிருக்கிறார் என்பதை டீசரே சொல்லி விட்டது. அதே போல் படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களுமே அஜீத்குமார் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
வரும் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் பாடல்களுக்கான இசை மற்றும் பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் செவ்வனே சிறப்பாக முடித்துவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த படம் மீது ஜீவி பிரகாஷ்குமார் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குட் பேட் அக்லி படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 3ம் தேதி குட் பேட் அக்லி டிரெய்லர் வெளியிடப்படுகிறது. ஏற்கனேவே டீசர் பர்ஸ்ட் சிங்கிள் செகன்ட் சிங்கிள் பாடல்கள் வெளியாக பெரிய சம்பவம் செய்துள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.





