- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் டீசர் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு -...

அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் டீசர் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு – உற்சாகத்தில் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகை திரிஷா அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். நடிகர்கள் பிரபு பிரசன்னா சுனில் அர்ஜூன்தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கேர்கடர்களில் நடித்திருக்கின்றனர்.

வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் திரைக்கு வர உள்ளது. அதே நாளில் தனுஷ் நடித்த இட்லி கடை படமும் ரிலீஸாக உள்ளது. தனுஷ் டைரக்ட் செய்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தனுஷ் டைரக்ட் செய்த இட்லி கடை படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

அஜீத்குமாருக்கு விடாமுயற்சி படம் பெரிய ஏமாற்றத்தை தந்த நிலையில் குட் பேட் அக்லி படம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அஜீத்குமார் 3 கேரக்டர்களில் நடித்திருக்கிறாரா, 3 கெட்டப்புகளில் நடித்திருக்கிறாரா என்பதில் இதுவரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

எனினும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமர்ஷியல் இயக்குனராக அவர் தன்னை நிரூபித்துவிட்ட நிலையில், அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகரான அவர் தனது அபிமான ஹீரோ அஜீத்குமார் படத்தை வேற லெவலில் டைரக்ட் செய்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

- Advertisement -

வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட்பேட் அக்லி படம் ரிலீஸாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வெளியாகும் டீசர் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 7.03 மணிக்கு அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.

மொத்தம் 1 நிமிடம் 34 விநாடிகள் வரை உள்ள குட் பேட் அக்லி டீசர், இன்று இரவு 7.03 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுவது மட்டுமின்றி, ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் என்பதையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதில் மீண்டும் தெரிவித்துள்ளது. ஏனெனில் சில தினங்களாக குட் பேட் அக்லி படம் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவிய நிலையில் அதற்கும் இதில் பதில் தரப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்